6 Feb 2015

உலகக்கிண்ண போட்டியில் அனுபவம் மிக்க வீரர்களுடன் இலங்கை அணி

SHARE
உலகக்கிண்ண போட்டியில் அனுபவம் மிக்க மற்றும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களுடன் இலங்கையணி களமிறங்கும் என இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் ராகுல் டிராவிட் மற்றும் முன்னாள் தென்னாபிரிக்க அணித்தலைவர் கிரேம் ஸ்மித் ஆகியோர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

உலகக்கிண்ணம் தொடர்பான முன்னோட்ட நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

உலகக்கிண்ணப் போட்டிக்காக தெரிவாகியுள்ள இலங்கையணி மற்றும் இலங்கையணி வீரர்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த டிராவிட் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் சமநிலையை வெளிப்படுத்தக்கூடிய வகையில் வீரர்கள் தெரிவாகியிருப்பதாகவும் இந்த அணியில் பல அனுபவ வீரர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக துடுப்பாட்டத்தில் மின்னும் குமார் சங்கக்காரா , மஹேல ஜயவர்த்தன, திலகரட்ண டில்ஷான் ஆகிய முன்னணி வீரர்களும் பந்துவீச்சில் மின்னும் ஹேரத் மற்றும் சசித்ர அணியில் இடம்பெற்றுள்ளமை சிறப்பானதாக அமையுமென தெரிவித்துள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: