வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தில் கடமையாற்றும் அனைத்து
உத்தியோகத்தர்களுக்கும் அவர்கள் கடமையாற்றும் பிரதேச செயலக பிரிவுகளில்
இருந்து வேறு பிரதேச செயலகபிரிவிற்கு இடமாற்றுமாறு வீடமைப்பு மற்றும்
சமுர்த்தி அமைச்சின் கீழுள்ள வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி
திணைக்களத்தினால் சகலமாவட்டங்களிலுமுள்ள திவிநெகும பணிப்பாளர்;களுக்கு
அறிவுறுத்தல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேசசெயலகங்களில்
மற்றும் மகாசங்கங்களில்,வங்கிச்சங்கம்,வெளிக்கள பணி ஆகியவற்றில்
5வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக கடமையாற்றும் அனைத்து வாழ்வின் எழுச்சி
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் அவர்கள் கடமையாற்றும் பிரிவிலிருந்து
வேறு பிரதேசபிரிவிற்கு இடமாற்றம் வழங்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு
மாவட்டபணிப்பாளர் பி.குனரெட்ணம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகலபிரதேச
செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்
0 Comments:
Post a Comment