19 Feb 2015

மூதூர் , தோப்பூர் பிரதேச வைத்தியசாலை குறைகளை கண்டறிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லாஹீர் நேரடி விஜயம்

SHARE
மூதூர் தளவைத்தியசாலை மற்றும் தோப்பூர் பிரதேச வைத்தியசாலைகளில் நிலவும் குறைகளை கண்டறிவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி லாஹீர் மற்றும் இராஜாங்க சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான சட்டத்தரணி பாய்ஸ் ஆகியோர் அண்மையில் நேரடியாக விஜயம் மேற்கொண்டனர்.

அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த வைத்தியசாலைகளில் நிலவும் முக்கிய தேவைகளை நிறைவேற்றுவது தொடர்பில் இராஜாங்க சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவை வெகுவிரைவில் தீர்க்கப்படும் என்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லாஹீர் தெரிவித்தார்.

தனது பண்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் மூதூர் தள வைத்தியசாலைக்கு 3 இலட்சம் ரூபாவும் தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்கு ஜெனரேட்டர் பெற்றுக் கொடுப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் லாஹீர் குறிப்பிட்டார்.

மூதூர் தள வைத்தியசாலையில்  வைத்தியர்கள் விசேட வைத்திய நிபுணரின் தேவை காணப்படுவதாகவும் இவைகளை நிவர்த்தி செய்ய உரிய தரப்பினரின் கவனத்திற்கு குறித்த பிரச்சினைகள் பலவற்றை கொண்டு வந்துள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் சுகாதார இராஜாங்க அமைச்சர் ஆகியோர் தமது கட்சியை சார்ந்ததாக இருப்பது சாதகமாக அமையுமென்றும் மாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

இவ்வைத்தியசாலைகளின் பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவதுடன் பொதுமக்களுக்க ஏற்படும் சிரமங்களை தவிர்க்க கூயதாக அமையுமென்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லாஹீர் மேலும் குறிப்பிட்டார்.
SHARE

Author: verified_user

0 Comments: