பொது விழாக்களில் குட்டை பாவாடை மற்றும் கவர்ச்சி உடைகள் அணிய மாட்டேன் என்று அனுஷ்கா கூறினார்.
இது குறித்து ஐதராபாத்தில் அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:– சினிமாவில்
உடுத்தும் ஆடைகளை நிஜ வாழ்க்கையில் நான் அணிய மாட்டேன். இதை ஒரு
கொள்கையாகவே வைத்து இருக்கிறேன்.
தெலுங்கில் சூப்பர் என்ற படத்தில்தான் அறிமுகமானேன். படப்பிடிப்பில்
என்னிடம் ஒரு ஆடையை கொடுத்து அணிய சொன்னார்கள். அதை விரித்து பார்த்த போது
குட்டை பாவாடையாக இருந்தது. நான் அதிர்ச்சியானேன். இதையா அணிய வேண்டும்
என்று கேட்டேன். ஆமாம் கதைப்படி உங்கள் கேரக்டருக்கு இந்த ஆடை தான்
உடுத்திக்கனும் என்றனர். வேறு வழியின்றி உடுத்திக் கொண்டு நடித்தேன்.
வீட்டில் உள்ளவர்கள் ஏன் இப்படியெல்லாம் நடிக்கிறாய் என்று கோபப்பட்டனர்.
சினிமாவில் கதை என்ன கேட்கிறதோ அதை செய்ய வேண்டும். கவர்ச்சி ஆடை
அவசியம் என்றால் அதை உடுத்திக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் நிஜ
வாழ்க்கையில் நான் வேறு மாதிரி இருக்கிறேன். சினிமா அனுஷ்காவை
நிஜவாழ்க்கையில் பார்க்க முடியாது. பட விழாக்கள் பொது விழாக்களுக்கு
கலாச்சார முறைப்படி ஆடைகள் அணிந்து செல்கிறேன். சினிமாவில் உடுத்துவது
போன்ற குட்டை பாவாடை, கவர்ச்சி உடைகளை அணிய மாட்டேன். இவ்வாறு அனுஷ்கா
கூறினா
0 Comments:
Post a Comment