மட்டக்களப்பு - மண்முனைபற்று பிரதேசத்தின் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அம்பியுலன்ஸ் வாகனம் இல்லாமையினால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் கடந்த 10.12.2014 அன்று விபத்திற்குள்ளாகிய அம்பியுலன்ஸ் வாகனம்; இன்றுவரை வைத்தியசாலைக்கு வழங்கப்படாமை காரணமாக சிறப்பான வைத்தியசேவை செய்ய முடியாமல் உள்ளதாகவும் சுட்டிக்காட்டி முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரான பூ.பிரசாந்தன் இது தொடர்பாக மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்.
கே.கருணாகரனுக்கு திங்கட் கிழமை (16) கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் தெவிவிக்கப் பட்டுள்தாவது..
மண்முனைப்பற்று பிரதேசத்தின் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் நோயாளர் காவுவண்டிஇ “அம்பியுலன்ஸ்” இன்மையினால் நோயாளர்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கிவருகின்றனர். ஆரையம்பதி தொடக்கம் கிரான்குளம் வரைக்கும் மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேசம் உள்ளிட்ட நோயாளர்களுக்கு வைத்தியசேவை வழங்கிவரும் இவ் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அம்பியுலன்ஸ் கடந்தவருடம் 10.12.2014ம் திகதிவிபத்துக்கு உள்ளானதாகவும் அன்றிலிருந்து அம்பியுலன்ஸ் வாகனம் இன்மையினால் அவசரசிகிச்சை நோயாளர்களையும், மேலதிகசிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்வதற்கான நோயாளர்களையும், ஏனைய வைத்தியசாலையில் அம்பியுலன்ஸ் வாகனத்தினை கோரியே கொண்டுசெல்லவேண்டியுள்ளது.
அம்பியுலன்ஸ் தாமதமாக கிடைப்பதன் காரணத்தினால் பல்வேறு சிரமங்களை நோயாளர்கள் எதிர்நோக்கி வருவதாகவும், அண்மையில் ஆரையம்பதி மாவிலங்கத்துறையில் ஒருவர் எரியுண்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட போதும் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு அனுப்பிவைப்பதற்காக தாமதமான காரணத்தினால் மக்கள் மத்தியில் பெரும் அதிதிருப்தி ஏற்பட்டதனையும் மக்கள் தெரிவித்தனர். என்பதனை சுட்டிக்காட்ட விருப்புகின்றேன்.
ஆகவே மண்முனைப்பற்றுஇ மண்முனைதென்மேற்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு வைத்தியசேவை வழங்கிவரும் மிகவும் பழமை வாய்ந்த மாவட்ட வைத்தியசாலையாக காணப்படும் இவ் ஆரையம்பதி வைத்தியசாலை போதனாவைத்தியசாலைகள் வழங்கும் சேவையினையே சிறப்பாக வழங்கிவரும் நிலையில் இவ்வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வாகனத்தினை துரிதமாக வழங்குவதன் மூலம் வைத்திய சேவையினை சிறப்பாக மேற்கொள்ள துணைபுரியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். என அந்தக் கடித்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment