24 Feb 2015

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறு போக பயிர்ச்செய்கைக்கான ஆரம்பக் கூட்டங்கள்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறு போக பயிர்ச்செய்கைக்கான ஆரம்பக் கூட்டங்கள் இம் மாதம் 26ஆம் திகதி முதல் மார்ச் 3ஆம் திகதி வரையில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவு பற்று - நவகிரி, தும்பங்கேணி, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான ஆரம்பக் கூட்டம் 26ஆம் திகதி வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் காலை 9.30 மணிக்கும், மண்முனை தெற்கு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள கடுக்காமுனை, புழுக்குணாவை, அடைச்சகல், சிறிய நீர்ப்பாசனத்திட்டத்துக்கான கூட்டம் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் மாலை 2.30 மணிக்கு நடைபெறும்.

மண்முனை மேற்கு -வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவின் உன்னிச்சை, சிறு நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு 27ஆம் திகதி வணவுதீவு பிரதேச செயலகத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறும். அதே நேரம், உறுகாமம், கித்துள் வௌ, வெலிக்காகண்டி, சிற நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான கூட்டம் 2.30க்கு ஏறாவூர் பற்று பிரசேத செயலகத்திலும் நடைபெறவுள்ளது.

28ஆம் திகதி கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப்பிரிவின், வாகனேரி, புணானை, தரவை, வடமுனை, சிறிய நீரப்பாசனத்திட்டங்களுக்கான ஆரம்பக் கூட்டம் கோரகல்லி மடு றெஜி கலாசார மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இடம் பெறும்.

கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப் பிரிவின், கட்டு முறிவு சிறிய நீர்ப்பாசனத்திட்டங்கள், மதுரங்கேணி, கிரிமிச்சை சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்காக ஆரம்பக் கூட்டம் வாகரை பிரதேச செயலகத்தில் காலை 9.30 மணிக்கும் இடம் பெறும் என்று மாவட்ட செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: