கிழக்கு மாகாண ஆட்சி மாற்றத்தினை வைத்து தமிழ் முஸ்லிம் சமூகங்களின்
ஒற்றுமையை சீர்குலைக்க கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு
மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளர் ஏ.சி.கியாஸ் விடுத்துள்ள
அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அன்மையில் கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினையடுத்து தமிழ் முஸ்லிம் தலைமைகள் போட்டி போட்டுக் கொண்டு ஆளுக்கு ஆள் விமர்சித்து வருவதானது கவலையை ஏற்படுத்துகின்றது.
இந்த விமர்சனமானது தமிழ் முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமைக்கு கலங்கம் ஏற்படுத்தும் செயலாகும். இன்று நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜனநாயகம், நல்லாட்சி தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை சமூகளுங்களுக்கான தீர்வுகள் இலட்சியங்கள் எட்டப்படவுள்ள இன்றைய சூழ் நிலையில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி மாற்ற விவகாரத்தினை வைத்து முந்திக் கொண்டு ஆளுக்கு ஆள் அறிக்கைகளை விட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. யதார்தத்திற்கு மாற்றமான முறையில் மக்களிடையே முகங்களை காட்ட முனைவது முட்டாள் தனமான செயற்பாடாகும்.
இந்த சந்தர்ப்பத்தினை பயன் படுத்தி பெரும்பான்மை சமூகத்திலுள்ள இனவாதிகளுக்கு தீனி போடும் செயற்பாடாக இவ்வாறான செயற்படுகள் அமைந்து விடும்.
இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியமாகும்.
கடந்த காலங்களில் இந்த இரண்டு சமூகங்களும் பட்டதுன்பங்கள், துயரங்கள் இழப்புக்கள் உயிர்ச்சேதங்கள், சொத்திழப்புக்கள் என்பவற்றை மறந்து விடயமுடியாது. இன்னும் இழப்பதற்கு எதுவும் கிடையாது.
தற்போதைய எமது அரசாங்கத்தின் பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் விடயத்தில் உறுதியாக உள்ளார்.
ஆகவே எமது தமிழ் முஸ்லிம் இரண்டு சமூகங்களும் தமது அரசியல் அபிலாஸைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வினை ஒற்றுமைப்பட்டு ஒரு மித்த கருத்துடன் பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தையின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 Comments:
Post a Comment