24 Feb 2015

லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் திறமைக்கான தேடல் விருது வழங்கும் விழா

SHARE
லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் 'திறமைக்கான தேடல் விருது' வழங்கும் விழா மருதூர் A.L.அன்ஸார்  வழிகாட்டலில் கொழும்பு வெள்ளவத்தை தமிழ்ச் சங்க மண்டபத்தல் சனிக்கிழமை (21) மாலை 5 மணிக்கு நடைபெற்றது. 

இவ்விருது வழங்கல் விழாவில் திருகோணமலை மாவட்டத்தில் மூத்த இலக்கியவாதி கலாபூஷணம்   சிவஸ்ரீ. அ. அரசரெத்தினம் அவர்களுக்கு கலை மாமணி பட்டமும் விருதும்,  பெண் எழுத்தாளர் வசந்தி ஜெயராஜ் அவர்களுக்கு கலைமாமணி பட்டமும் விருதும், ஊடகவியலாளர் அ. அச்சுதன் அவர்களுக்கு கலை இலக்கிய ஊடகத்துறை சமூக சேவையினை பாராட்டி கலைத்தீபம் பட்டமும் கலைச்சுடர் விருதும், திருமதி. நா. ஜெயலட்சுமி (ஆசா) அவர்களுக்கு சமூக சேவைக்கான பட்டமும் விருதும், எழுத்தாளர் ச. திருச்செந்தூரனுக்கு கலைச்சுடர் விருதும் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். விருதுகளுடன் சமூக ஆர்வளர்களை படங்களில் காணலாம்.




SHARE

Author: verified_user

0 Comments: