12 Feb 2015

தொண்டர் ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில்

SHARE
கிழக்கு மாகாணத்தில் கடந்த10, 12வருடங்களாக தொண்டராசிரியராக கடமை புரிந்த கிண்ணியா, திருகோணமலை, ஈச்சலம்பற்று, சேர்வில, புல்மோட்டை, குச்சவெளி, மூதூர் இகந்தளாய் போன்ற பிரதேசங்களில் இருந்து சுமார் 300 மேற்பட்ட தொண்டராசிரியர்கள் யுத்தம், சுனாமி காலங்களில் ஊதியம் எதுவும்மின்றி கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த போதிலும் இது வரை எந்த வித பயனும் கிடைக்காத நிலையில் பல அரசியல் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்தும் கோரிக்கை முன்வைத்தும் இதுவரையில் தீர்வு எட்டப்படாத நிலையில் கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் கவனத்திற்க்குக் கொண்டு வருவதற்காகவேண்டி முதலமைச்சரின் காரியாலயத்துக்கு முன்னால்  கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை திருகோணமலை மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கம் இன்று வியாழக்கிழமை (12) நடாத்தியது.

இதனை கவனத்தில் எடுக்குமாரறு கோரி கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட்டினை தொண்டராசிரியர் சங்க தலைவர் ஏ.எஸ்.எம்.அனீஸ் எஸ்.இலங்கையன் மற்றும் தொண்டர் ஆசிரியர் சங்க முக்கியஸ்தர் கொண்ட குழு முதலமைச்சரிடம் தங்களது பிரச்சினைகளை தெளிவு படுத்தி அவர்களுக்கான நல்ல தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி மகஜர் ஒன்றினை கையளித்தனர்.

இதனை தொடர்ந்து கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் இப்பிரச்சினையை கவனத்தில் எடுத்து சம்மந்த்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: