14 Feb 2015

காணிச்சட்டம் தொடர்பான விழிப்பூட்டல்

SHARE
 மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் பிரதேச செயலாளர் பிரிவில் அடிப்படை  காணிச்சட்டம் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வொன்று, வெள்ளிக்கிழமை (13) கடுக்காமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் எஸ்கோ நிறுவன அனுசரணையுடன்  நடைபெற்றது.

இதில் பிரதேச காணி உத்தியோகத்தர் எஸ்.ஞானப்பிரகாசம், அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சிவநடராசா ஆகியோர் கலந்து கொண்டு  விளக்கங்களை மக்களுக்கு வழங்கினர்.

இதன்போது காணி உரித்து, சொந்தக் காணிக்கு இருக்க வேண்டிய ஆவணங்கள், றூட், பேர்ச், ஏக்கர், ஹெக்ரயர் போன்ற விபரங்கள் தொடர்பாகவும், பொதுமகள் பின்பற்றவேண்டிய காணிச் சட்ட நடைமுறைகள் பற்றியும் விளக்கமளிக்கபட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.





SHARE

Author: verified_user

0 Comments: