கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள
தடை நீக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்
அமைச்சருமான ரவூப் ஹக்கீம் (08) ஆம் திகதி தாருஸ்ஸலாமில் நடைபெறும்
ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவித்தார்
ஊடகவியலாளர் மாநாட்டில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஏ.எம்.ஜெமீல்
கலந்து கொண்டு தான் நடந்து கொண்ட முறை தவறானது என ஏற்றுக்கொண்டு
மன்னிப்புக் கோரினார்.
கிழக்கு முதலமைச்சராக ஏ.எம்.ஜெமீல் நியமிக்கப்படாததை அடுத்து ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை
சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தினை அடுத்து கட்சியின் அனைத்து பதவிகளிலுமிருந்து ஜெமீல்
கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமினால் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துடன்
தனக்கு தொடர்பில்லை என்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல்
தெரிவித்தார்.
இந்த நிலையில் அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட அனைத்து தடைகளும் இன்றிலிருந்து நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கட்சின் செயலாளரும் இராஜங்க அமைச்சருமான
எம்.ரீ.அஸன் அலி, பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், அம்பாறை மாவட்ட
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம்,
சட்டத்தரணிகளான ஜே.லாஹிர், ஆரீப் சம்சுதீன், முஹம்மட் அன்வர்,
எம்.ஐ.எம்.மன்சூர், வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ்
உள்ளிட்ட பல கட்சி உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment