3 Feb 2015

திருகோணமலையில் -கடத்தப்பட்ட உறவுகளைத் தேடி கவனயீர்ப்பு

SHARE
கடத்தபட்டோர், காணாமற்போனோரை கண்டு பிடித்து அவர்ளின் குடும்பங்களுடன் சேர்க்குமாறு கோரியும் சிறையில் வாழும் அரசியல் கைதிகளுக்கு முறையான விசாரனை நடாத்தி விடுதலை செய்யவேண்டும் என கோரி திருகோணமலை உட்துறைமுக வீதி கலாச்சார மண்டபத்திற்கு முன்னாள் உள்ள சிறுவர் பூங்காவில் 03.02.2015 செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தினர்.

இக் கவனயீர்ப்பு போராட்டத்தை நாங்கள் அமைப்பு மற்றும் கடத்தபட்டோர், காணாமல் போனோர் உறவுகளின் அமைப்பு, திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாஜம், அமரா குடம்பத்தலமை தாங்கும் பெண்கள் ஒன்றியம் ஆகிய மகக்ள் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், மூதூர் கிழக்கு, குச்சவெளி, தம்பலகாமம், கிண்ணியா, வெருகல், ஈச்சிலம்பற்று, பட்டினமும் சூழலும் என பல பிரதேசங்களில் இருந்து தமது உறவுகளைத் தேடும் குடும்பங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கண்ணீர் மழ்க கதறினர்.

புதிய அரசு இவ் விடயத்தில் கவனம் எடுக்க வேண்டும் என உறவுகளை இழந்தவர்கள் மன்றாடினார்கள். இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை நகர சபை தலைவர் க.செல்வராஜா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கு.நாகேஸ்வரன், ஜெ.ஜெனார்த்தனன், திருகோணமலை மாவட்;ட தமிழசுக் கட்சியின் செயலாளர். க.கனகசிங்கம் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பழ்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள் என பெருமலவானோர் இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன் போது தம்மிடம் ஏற்கனவே இருந்த 200ற்கு மேற்பட்ட கடத்தபட்டோர், காணாமற்போனோர்களின் விபரங்களையும் இன்றைய தினம் புதிதாக பதியப்பட்டவர்களின் தகவல் அடங்கிய மகஜர் ஒன்றினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.





   

SHARE

Author: verified_user

0 Comments: