5 Feb 2015

சிறுவனைச் துஷ்பிரயோகம் செய்த இளைஞன் விளக்கமறியல்

SHARE
(ஷமி)
வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொறுகாமம் பகுதியைச் சேர்ந்த 11 வயடைய சிறுவன் ஒருவன் கடந்த செவ்வாய்கிழமை கொக்கட்டுச்சோலை மாவடிமும்மாரி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார்.

மேலும் தெரியவருவதாவது யோகராசா-கிருஷன் என்பவர் பொறுகாமப்பகுதியில் வீதிவழியாக செல்லும் போது அதேவீதியினூடக வந்த  இளைஞர் ஒருவர் சிறுவனை மறித்து உரையாடியபின்னர் மேச்சலில் நிற்கும் மாடுகளை பார்பதற்கு வரும் படி அழைத்துச் சென்று சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திருந்தார். சம்பவத்தை அறிந்த உறவினர்கள் வெல்லாவெளிப் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்திருந்ததாகவும்.பின்னர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞனை பொலிஸார் கைதுசெய்து மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவுபிறப்பித்ததாகவும் பாதிப்புக்குள்ளான சிறுவன் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: