கல்முனையில் இரண்டு தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது. கடந்த இரண்டு தினங்களாக கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அக்கரைப்பற்று போன்ற பகதிகளிலும் பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை, கல்லாறு, கழுவஞ்சிக்குடி போன்ற பகுதிகளிலும் பரவலாக அடைமழை பெய்து வருகின்றது.
இதனால் பொது மக்களின் இயல்புவாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் அடைமழை பெய்வதால் வியாபாரிகள், மீனவர்கள், விவசாயிகள். நாளாந்தகூலி வேலைகளில் ஈடுபடுவோர் மற்றும் அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை அம்பாறை மாவட்டத்தன் பல பகுதிகளில் தற்போது விவசாய அறுவடை நடைபெற்று வருகின்றது. விவசாயிகள் தமது அறுவடை நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். வெட்டப்பட்ட நெல் மணிகளை வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று சிரமத்துக்கு மத்தியில் காயவைப்பதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
0 Comments:
Post a Comment