தமிழிழன் ஓருவன் எவ்வாறு தன்மனமாக வழவேண்டும் என்ற வாழ்க்கையை உணர்த்தும் வாழ்வை வாழ்ந்து காட்டியவர் இந்த கூட்டணி அரசன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.
மட்டக்களப்பு களுதாவயையைச் சேர்ந்த கூட்டணி அரசன் என்றழைக்கப்படும் ஆரம்பகால தமிழிழர் விடுதலைக் கூட்டணியின் தீவிர ஆதரவாளரும் தற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவிரஆதரவாளராக இருந்து மக்களின் செல்வாக்கை பெற்றவருமாகிய சுந்தரப்பிள்ளை அரசரெத்தினம் அவர்களின் அஞ்சலி நிகழ்வு புதன் கிழமை (25) களுதாவளையில் நடைபெற்றது, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தெடர்ந்து உரையாற்றுகையில்
கூட்டணி அரசன் என்று பெயர் போற்றும் அளவிற்கு 1977 ஆம் ஆன்டு காலப்பகுதியினிலிருந்தே மிகவும் திவிரமாக கட்சி சார்பாக பாடுபட்டவர். ஒருகாலத்தில் அவரின் சகோதரர் வேறுகட்சிக்கு வேலை செய்த வேளையில் அரை எதிர்த்து செயற்படவும் அவர் தயங்கவில்லை இதனால் இவர் இரும்புக்கரம் கொண்டு தாக்கப்பட்டார்.
இங்கு உரையாற்றிய அனைவரும் இவரை சண்டியனேன்றே கூறினார்கள் உண்மையில் இவர் சண்டியனில்லை இவர் அனைவருக்கும் சண்டியனாக செயற்படவில்லை தமிழ்த் தேசியத்திற்கு எதிராக செயற்பட்டவர்களுக்கே சண்டியனாக செயற்பட்டார்.
அவரின் அரசியல் பாதை மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது இறக்கும் வரை மாற்றுக் கட்சியின்னால் பால் சாரமால் ஒரேகட்சியுடன் நின்று தமிழுக்காக, தமிழனனுக்காக உழைத்தவர் இவர்போன்ற ஆதரவாளர்களை தற்காலத்தில் இனங்காண்பது மிக அரிதாகத்தான் காணப்படும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. தேர்தல் காலங்களிலே தமிழர் விடுதலை கூட்டணி மேடைகளிலே வேட்பாளர்களுக்கு தனது நெஞ்சைக்கீறி அந்த இரத்த்தினால் வெற்;றித்திலகம் இட்டிருக்கின்றார் அந்த அளவுக்கு இவர் தீவிர ஆதரவாளராக செயற்பட்டவர்.
அது மாத்திரமின்றி சிறந்த ஒழுக்க சீலராகவும் வாழ்ந்தவர் இவ்வாறான அரசியல் பாதையில் வாழ்ந்த இவரின் இழப்பு எனது தனிப்பட்டமுறையிலும் ஈடுசெய்ய முடியாத இழப்பு எனத் தெரிவித்தார்.
இவரது அஞ்சலி நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் கட்சியின் ஆதரவாழர்கள், அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டதுடன் அஞ்சலி உரையினையும் நிகழ்த்தியிருந்தனர்…
0 Comments:
Post a Comment