சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளிக் கோட்டத்திற்கு தாமதியாமல்
கோட்டக்கல்விப் பணிப்பாளரொருவரை நியமிக்குமாறு கிழக்குமாகாண
கல்விஅமைச்சின் செயலாளரிடம் இலங்கைத்தமிழர் ஆசிரியர்சங்கம் வேண்டுகோள்
விடுத்துள்ளது.
அங்கிருந்த கோட்டக்கல்விப்பணிப்பாளர் வேறு நியமனம் பெற்றுச்சென்றுள்ள
போதிலும் இன்னும் நிரந்தர பணிப்பாளரொருவர் நியமிக்கப்படாமையினால் இன்னோரன்ன
பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுகின்றன.
இக்கோட்டத்திற்கு பதில் பணிப்பாளராக இறக்காமத்தில் பதில் பணிப்பாளராக கடமையாற்றும் ஒருவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதில் பணிப்பாளரொருவரை இன்னுமொரு இடத்திற்கு பதில் பணிப்பாளராக
நியமிக்கலாமா? என்பதற்கு அப்பால் ஏலவே இக்கோட்டத்திற்கான பணிப்பாளர்
நியமனம் மனிதஉரிமை ஆணைக்குழுவில் விசாரணையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏலவே ஆசிரியர்களின் சம்பள உயர்ச்சிகள் தேக்க நிலையிலுள்ள இந்நிலையில்
நிரந்தர பணிப்பாளர் நியமிக்கப்படும்வரை மேலும் பல பிரச்சினைகள் எழ
வாய்ப்புண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது.
உரிய நியமனம்வரை கல்விச் செயலாளரின் தழுவல் அங்கீகாரத்தை எதிர்பார்த்து
வலயத்திலுள்ள இலங்கை கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த அதிகாரியொருவரை அல்லது
அக்கோட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த சிரேஸ்ட அதிபரொருவரை தற்காலிமாக
நியமித்திருக்கலாமென சங்கம் கருதுகின்றது.
நாவிதன்வெளிக் கோட்டத்தின் அதிபர்கள்ஆசிரியர்கள் மாணவர்கள் உரிய
கண்காணிப்பின்றி தமக்கான சேவைகளின்றி நீடிக்கப்படுவதை சங்கம்
விரும்பவில்லை.எனவே உடனடியாக தகுதி வாய்ந்த ஒருவரை உரியமுறைப்படி நியமிக்க
நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகின்றோம்
0 Comments:
Post a Comment