மட்டக்களப்பு மாவட்டத்தில் பொரும்போக நெல்வேளாண்மைச் செய்கை அறுவடைக்கும் சிறுபோக நெற்செய்கை ஆரம்பிப்பதற்கு இடைப்பட்டகாலப்பகுதியில் அவ்வயல் நிலங்களில் உபஉணவுப் பயிர்ச் செய்கையை ஊக்குவிற்பதற்கான புதியதிட்டம் அங்குராப்பணம் செய்யப்பட்டது.
விவசாயிகளின் நன்மை கருதி விவசாயம் மற்றும் நீர்பாசனத்திணைகளங்களின் ஏற்பாட்டில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 20 ஏக்கர் நிலத்தில் உபஉணவுப்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் 200 ஏக்கரில் பயிர் இப்பயிர்ச்செய்கைமேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின்கீழ் உன்னிச்சை பொன்னாங்கனிச் சேனை பிரதேசத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாய திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கௌபி,பயறு,மற்றும் சோளன் போன்ற தானியங்களுடன் வெங்காயம் உள்ளிட்ட பயிர்களையும் இடைக்காலச் செய்கையாக மேற்கொள்ள முடியுமென விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தின்மூலம் வயல் நிலம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு வளம் மிக்கதாக மாற்றப்படுவதுடன் விவசாயிகளுக்கு தொடர்ச்சியான வருமானத்தையும் ஏற்படுத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.
உன்னிச்சை பொருநீர்ப்பாசன திட்டத்தின்கீழ் ஆயித்தியமலை விவசாயப் போதனாசிரியர் பிரிவிலுள்ள
பொன்னாங்கனிச் சேனையில் இத்திட்ட அங்குராப்பண நிகழ்வு நடைபெற்றது.
0 Comments:
Post a Comment