மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மேற்கு ஒட்டமாவடி பிரதேச செயலாளர்
பரிவிலுள்ள 207ஏ கிராம சேவகர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் அவரை
இடமாற்றம் செய்யுமாறும் கோரி 02-02-2015 திங்கட்கிழமை
மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில்
மாஞ்சோலை கிராம மக்கள் உட்பட ஒட்டமாவடி பிரதேச சபையின் உதவித் தவிசாளர்
நௌபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சமூக சேவகர்களை தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும்
மாஞ்சோலை கிராம சேவகரே வெளியேறு, விளையாட்டு கழகங்களை இரத்துச் செய்யத்
துடிக்கும் கிராம சேவையாளரே வெளியேறு, இடமாற்றத்தை ஏற்றுக்கொள் எமது ஊரை
விட்டு வெளியேறு வெளியேறு, டி.எஸ். அவர்களே மாஞ்சோலை 207ஏ கிராம சேவகர்
பிரிவுக்கு புதிய கிராம சேவகரை உடடியாக நியமித்துத் தாருங்கள் போன்ற
வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க
அதிபர் அதிபர் திருமதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட
மக்களிடம் குறித்த விடயம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதோடு இது தொடர்பில்
ஒரு வார காலத்திற்குல் தான் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இங்கு மாஞ்சோலை கிராம மக்களினால் அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment