ஜ.பி.எல்
போட்டிக்காக இடம்பெற்ற ஏலத்தில் இலங்கை அணித்தலைவர் மத்யூஸ் 7.5 கோடி
இந்திய ரூபா பெறுமதியில் நிர்ணயிக்கப்பட்டுள்ளார். 8 ஆவது ஐ.பி.எல் 20 ஓவர்
கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் மே 24 ஆம் திகதி
வரை இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடக்கவுள்ளது.
இதையொட்டி போட்டியில் இடம்பெறுகின்ற 8 அணிகளும் 123 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. இதில் வெளிநாட்டு வீரர்கள் 44 பேர் அடங்குவார்கள். ஏனைய நீக்கப்பட்ட வீரர்களும், புதிய வீரர்களும் அண்மையில் இடம்பெற்ற ஐ.பி.எல். ஏலப் பட்டியலில் இடம் பெற்றனர்.
ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் பெங்களூரில் நேற்று முந்தினம் நடந்தது. இதன் போது இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்யூஸ் அதிகூடிய விலைக்கு ஏலம் போன வெளிநாட்டு கிரிக்கட் வீரராக பதிவானார். இவரது ஆரம்ப விலையாக 1.5 கோடி இந்திய ரூபாய்கள் நிர்ணயிக்கப்பட்டது. பல அணிகளும் முட்டிக் கொண்டு மத்யூஸை ஏலத்தில் எடுக்க முயற்சித்தன. இறுதியில் மத்யூஸ் ரூ.7.5 கோடிக்கு ஏலம் போனார்.
இப் பெறுமதியான விலையுடன் டெல்லி டேர்டெவல்ஸ் அணி அவரை எடுத்தது. 2011 உலக கிண்ண போட்டியில் தொடர் நாயகன் விருதை பெற்ற அதிரடி வீரர் யுவராஜ் சிங் ரூ.16 கோடிக்கு ஏலம் போனார். டெல்லி டேர்டெவல்ஸ் அணி அவரை எடுத்தது. அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ.2 கோடியாகும். 8 மடங்கு அதிகமாக அவர் விலை போனார்.
கடந்த ஐ.பி.எல். போட்டியில் யுவராஜ் சிங்கை பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி ரூ.14 கோடிக்கு எடுத்தது. சரியாக சோபிக்காததால் அவரை கழற்றி விட்டது. அவர் அதை விட மேலும் ரூ.2 கோடிக்கு ஏலம் போய் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை பெங்களுர் அணி ரூ.10½ கோடிக்கு எடுத்தது. கடந்த முறை அவர் டெல்லி அணியில் விளையாடினார்.
மற்றொரு தமிழக வீரர் முரளி விஜய்யை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எடுத்தது. அவரது விலை ரூ.3 கோடியாகும். ஏலத்தில் போன மற்ற வீரர்கள் விவரம் வருமாறு:- பீட்டர்சன் (இங்கிலாந்து)- ரூ.2 கோடி (சன் ரைசர்ஸ் ஹைதராபாத்) அமித்மிஸ்ரா (இந்தியா)- ரூ.3.2 கோடி (டெல்லி) மோர்கன் (இங்கிலாந்து)- ரூ.1.5 கோடி (மும்பை இந்தியன்ஸ்) ஏலத்தில் இடப்பட்ட சங்கக்கார, ஜயவர்தன, டில்சான், சஜித்திர சேனாநாயக்க, லஹிரு திரிமான்ன போன்ற எந்தவொரு இலங்கை வீரரும் ஏலத்தில் விலை போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment