24 Feb 2015

மூதூர் மத்ரஸத்துல் கன்சில்குர்ஆனின் 3 ஆவது பட்டமளிப்பு

SHARE
மூதூர் மத்ரஸத்துல் கன்சில்குர்ஆனின் 3 ஆவது பட்டமளிப்பு விழா கடந்த 20 ஆம் திகதி மூதூர் ஜலீல் மண்டபத்தில் மத்ரஸாவின் அதிபர் மௌலவி இக்பால் நிப்ராஸ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹீர் கலந்து சிறப்பித்தார். அவர் இங்கு உரையாற்றுகையில் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றாற் போல மத்ரஸா கல்வி காணப்படுகின்றமை மாணவர்கள் சமகால உலகில் ஏற்படக்கூடிய சவால்களை வெற்றி கொண்டு உயர்நிலைக்கு இட்டுச்செல்ல ஏதுவாக அமைவதாக இதன்போது தெரிவித்தார்.

முஸ்லிம்களின் கலை கலாசார நிகழ்வுகளிற்கு ஏற்றாற்போல நிகழ்ச்சிகள் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
cultural 1



SHARE

Author: verified_user

0 Comments: