24 Feb 2015

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 26.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் இடையிடையே பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் கிராமங்களிலுள்ள சில வீதிகளும் மழை நீரில் பாதிக்கப் பட்டுள்தோடு ஆகக் கூடுதலாக பாசிக்குடாவில் 74.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளது.

பெரும்போக அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இறுத்தி நேரத்தில் மழை பெய்து வரவதனால், விவசாயிகளும் பாதிப்ப ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் திங்கட் கிழமை காலை (23) 8.30 மணிமுதல் செவ்வாய்கிழமை (24)  காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 26.1 மில்லி மீற்றர் சராசரி மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மவாட்ட வானிலை அவதான நிலையத்திப் பெறுப்பத்திகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.
 
அந்த வகையில் நவகிரி ஆற்றுப் பகுதியில் 8.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 6.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 12.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கட்டுமுறிவு குளம் அமைந்துள்ள பகுதியில் 37.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 42.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமம் குளம் அமைந்துள்ள பகுதியில் 45.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளியில் 29.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பாசிக்குடாவில் 74.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக, மட்டக்களப்பு மவாட்ட வானிலை அவதான நிலையத்திப் பெறுப்பத்திகாரி கே.சூரியகுமாரன்  மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: