11 ஆவது உலக
கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து
நடத்துகின்றன. போட்டி ஆரம்பமாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ஆரம்ப விழா
இன்று (12) இரண்டு நகரங்களிலும் கோலாகலமாக நடத்த ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
இதன்படி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன்
நகரிலும், நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரிலும் உள்ளூர் நேரப்படி இரவில்
ஆரம்ப விழா நடக்க உள்ளது. கிரிக்கெட் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும்
கண்கவர் நிகழ்ச்சிகள், பிரபலங்களின் பேச்சுக்கள், இசை மழை, வண்ணமயமான
வாணவேடிக்கை உள்ளிட்டவை இடம் பெறும்.
இந்த கோலாகல நிகழ்ச்சி இலங்கை நேரப்படி இன்று (12) மதியம் இரண்டு மணிக்கு இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த கோலாகல நிகழ்ச்சி இலங்கை நேரப்படி இன்று (12) மதியம் இரண்டு மணிக்கு இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment