காத்தான்குடிப் பிரதேசத்தில் முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்வோருக்கான
கட்டணம் நூற்றுக்கு பத்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி
முச்சக்கர வண்டிகள் சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் என்.எம்.அபுல்
பஸல் தெரிவித்தார்.
இந்த நடைமுறை காத்தான்குடி முச்சக்கர வண்டிகள் சாரதிகள் நலன்புரிச்
சங்கத்தினால் காத்தான்குடி பிரதேசத்தில் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக அவர்
கூறினார்.
அதே நேரம் காத்தான்குடி முச்சக்கர வண்டிகள் சாரதிகள் நலன்புரிச்
சங்கத்தில் காத்தான்குடியிலுள்ள ஐநூற்றுக்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள்
பதிவு செய்யப்பட்டுள்ளன.
எமது சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முச்சக்கர வண்டிகளில் பயணம்
செய்வோருக்கான கட்டணம் நூற்றுக்கு பத்து ரூபாவினால்
குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
காத்தான்குடியில் முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்வோர் எமது சங்கத்தின்
பச்சை நிற அடையாளமிடப்பட்ட லேபல் ஒட்டிய முச்சக்கர வண்டிகளைப்
பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
0 Comments:
Post a Comment