7 Feb 2015

10 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த முதியவர் விளக்கமறியில்

SHARE
10 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேகநபரை, கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.வெதகெதர தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர் நீதிமன்ற உத்தரவின்பேரில் எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய காத்தான்குடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவன் தனது தாயிடம் கூறியதையடுத்து தாய், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறுவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் 67 வயதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், தேடப்பட்டு வந்தார்.

இந்தநிலையில் காத்தான்குடி பொலிஸார் நேற்று மாலை இவரைக் கைதுசெய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
SHARE

Author: verified_user

0 Comments: