1 Feb 2015

மட்/மே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் நடைபெற்ற தரம்-01 மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு

SHARE
(யுவாமி)
மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் நடைபெற்ற  தரம்-01 மாணவர்களின் ஆக்கத்திறனை விருத்தி செய்வதற்கான ஊர்வலம் 30ம் திகதி வியாழக்கிழமை வித்தியாலய அதிபர் எஸ்.தேவராஜா தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வானது வித்தியாலய வளாகத்திலிருந்து ஆரம்பமாகி கடுக்காமுனை கிராம வீதிகள் ஊடாக இடம்பெற்றது. இன் நிகழ்வினை சிறப்பிற்கும் வகையில் தரம்-01 மாணவர்கள் தமது காவடி ஆட்டம் மூலம் தங்களது திறமைகளை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிற்கும் முகமாக மட்டக்களப்பு மேற்கு வலய விசேட கல்விக்கான உதவிக்கல்விப்பணிப்பாளரும் இப் பாடசாலைக்கு பெறுப்பான psi coordinator எஸ். கமலநாதன் கலந்து கொண்டு இந் நிகழ்வை சிறப்பித்தார். தரம்-01 மாணவர்களின் ஆக்கத்திறனை விருத்தி செய்யும் ஒரு நிகழ்வு வீதிகளில் நடைபெற்றிருந்தமை கடுக்காமுனை வித்தியாலயத்திலேயே என்பது குறிப்பிடதக்கது.

மாணவர்களின் காவடி ஆட்ட நிகழ்வினை திருமதி.சு.சோமசுந்தரம் ஆசிரியை ஒழுங்கமைத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.












SHARE

Author: verified_user

0 Comments: