7 Jan 2015

ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் வால் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது

SHARE
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தின் வால் பகுதியை கடலில் கண்டுபிடித்திருப்பதாக இந்தோனேசிய அதிகாரிகள் கூறியுள்ளனர். 
இந்தோனேசியா அருகே உள்ள ஜாவா கடலில் 11 நாட்களுக்கு முன்னர் இந்த பயணிகள் விமானம் 162 பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது. விமானத்தின் வால் பகுதியில்தான் விமானத்தின் ஒலி மற்றும் விமானப் பறத்தல் தொடர்பான பதிவுகள் செய்யப்படும் கருவி இருக்கும் என்பதல் இந்த கருவிகள் விரைவில் மீட்கப்படும் என்ற நம்பிக்கைகள் அதிகரித்துள்ளன.

இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் அசாதாரண காலநிலை மாற்றத்தினாலும் மற்றும் கண்டறியப்படாத காரணத்தினாலும் விபத்துக்குள்ளானது. மேலும் தொடர்ந்து இப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக விமானத்தின் நொறுங்கிய பாகங்களைக் கண்டறியும் முயற்சி தடங்கலுக்குள்ளானது.

இந்நிலையிலேயே இவ்விமானத்தின் பாதமாக கருதப்படும் வால்ப்பகுதி இனங்காணப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
SHARE

Author: verified_user

0 Comments: