26 Jan 2015

ஒரு நாட்டின் விடுதலைக்காக போராடிய இனம் அந்த போராட்டத்தை அடக்கி விட்டால் அது சமாதானம் இல்லை. அரியம் M.P

SHARE
(ரெட்ணம்)
மட்டு திருப்பழுகாமத்திலே இடம்பெற்ற  பொங்கல் விழாவிலே மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பா.அரியநேத்திரன் அவர்கள் வெறுமனே சமாதானம் என்றால் என்ன ஒரு நாட்டின் விடுதலைக்காக  போராடிய இனம் அந்த போராட்டத்தை அடக்கி விட்டால் அது சமாதானமா? அல்லது அந்த விடுதலைக்காக போராடிய இனத்துக்கு சுதந்திரம் கிடைத்து விட்டால் சமாதானமா?   ஆனால் மஹிந்த அரசாங்கம் அந்த போராட்டத்தை அடக்கி விட்டு சமாதானம் என்றார்கள். அவர் மேலும் உரையாற்றுகையில்….

நமது இனத்துக்கென்று நிலம்  கலைபாராம்பரியங்களை பண்பாடுகளை பாதுகாக்க வேண்டுமென்று  கடந்த காலங்களில் இந்த மண்ணுக்காக 65 வருடமாக நாம பல வழிகளில் போராடி வருகின்ற ஒரு இனமாக நாம் இருந்து வருகின்றோம். அஹிம்சை வழியாக போராடி ஆயுத ரீதியாக போராடி தற்போது இராஜதந்திர வழியாக எமது மண்ணுக்காகவும் கலைபாரம்பரியங்களுக்காகவும் தமிழனின் தனித்ததுவத்திற்காக போராடி வருகின்றோம். மக்களுக்கு அறம் சார்ந்த கல்வியாக வளர்க்கப்பட்டு ஆன்மீக சார்ந்த கல்வி போதிக்கப்பட்டாலும் வரலாறு சார்ந்த அரசியல் விடயங்களை மாணவர்களுக்கு  நாம் போதிக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் நமது நிலம் மற்றும் கலைகலாசாரங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு பேணப்பட்டு வரும்.

பல்வேறுபட்ட அரசியல் மாற்றங்களுக்கு பிற்பாடு நாம் இவ்விழாவிலே கலந்து கொண்டுள்ளோம். கடந்த வருடம் இப்பொங்கல் விழாவிலே அதிதிகளையும் விட புலானாய்வாளர்களே அதிகமாக காணப்பட்டார்கள் ஆனால் இம்முறை அந்த நிலை மாறியுள்ளது.

2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி இந்த நாட்டிலே சமாதானத்தை கொண்டு வந்ததாக மஹிந்த அரசாங்கம் அவர் கூறிய சமாதான இந்த ஐந்து வருடங்களும் முதலில் இருந்ததா என்பதை நாம் பார்க்க வேண்டும்.
வெறுமனே சமாதானம் என்றால் என்ன ஒரு நாட்டின் விடுதலைக்காக விடுதலைக்காக போராடிய இனம் அந்த போராட்டத்தை அடக்கி விட்டால் அது சமாதானமா? அல்லது அந்த விடுதலைக்காக போராடிய இனத்துக்கு சுதந்திரம் கிடைத்து விட்டால் சமாதானமா?   ஆனால் மஹிந்த அரசாங்கம் அந்த போராட்டத்தை அடக்கி விட்டு சமாதானம் என்றார்கள். அந்த சமாதானத்திற்கு வரைவிலக்கணமாக பல்வேறுபட்ட நிகழ்வுகளை முன்வைத்தது. வடகிழக்கில் பாலம் வீதிகள் யாழ்தேவி மற்றும் பல அபிவிருத்திதான் சமாதானம் என்றது மஹிந்த அரசாங்கம்.

அவர்களின் சமாதானம் என்பது தமிழ் இனம் 65 வருடங்களாக அபிவிருத்திக்காக போராடிய ஒரு இனம் அது அனைத்தும் கிடைத்து விட்டது இதுதான் சமாதானம் என்ற மாயையை அவர்கள் கூறியிருந்தார்கள்.
அதுவல்ல சமாதானம் தென் பகுதியிலே வாழுகின்ற சிங்கள மக்கள் எந்த உரிமையுடன் எந்த சுதந்திரத்துடன் எந்த அபிலாசையுடன் வாழ்கின்றனரோ அதனை எமக்கும் தரவேண்டும் என்பதை நாங்கள் தொடர்ச்சியாக கூறியிருந்தோம்.


SHARE

Author: verified_user

0 Comments: