31 Jan 2015

பதவி பட்டம் இருந்தால்தான் சமூகத்திற்கு சேவையாற்ற முடியும் என எவரும் நினைக்கக் கூடாது - Dr.ஜி சுகுணன்.

SHARE
பதவி பட்டம் இருந்தால்தான் சமூகத்திற்கு  சேவையாற்ற முடியும் என எவரும் நினைக்கக் கூடாது  அவை சேவை செய்வதற்குரிய கருவி மாத்திரமே! என களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜி .சுகுணன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் தென்றல் சஞ்சிகையின் ஏற்பாட்டில் கலாபூசணம் மு.தம்பிப்பிள்ளை எழுத்திய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா சனிக்கிழமை (31) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு நூலின் முதற் பிரதியைப் பெற்றுவிட்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தொர்ந்து இதன்போது கருத்து தெரிவிக்கையில்….

ஒருமனிதனின் உன்னதமான நோக்கம் என்னவெனில் தான் வாழ்கின்ற காலத்தில் தனது சக்தியை பயன்படுத்தி தன்னால் ஆன உதவிகளை அல்லது பங்களிப்புக்களை சமூகத்திற்கு செய்ய வேண்டும். பதவி பட்டம் இருந்தால்தான் நாங்கள் சேவையாற்ற முடியும் என எவரும் நினைக்கக் கூடாது இவற்றிக்கெல்லாம் அப்பால் இந்த பதவி, பட்டம் அனைத்தினையும் மக்கள்சேவைக்கு கருவியாக பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டும்.

புத்தக வெளியீட்டு விழா என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் காரணம் புத்தகமின்றி எந்த கல்வியும் இல்லை நிறைய விடையகங்களை வாசித்து அறிவதன் மூலமே நாங்கள் கல்வியிலோ மற்றும் ஏனைய விடயங்களிலும் வீறு நடை போட்டுச் செல்ல முடியும் என்பதுடன் இதனால் நாங்கள் வாழ்வில் முழுமையும் முன்னேற்றமும் காண்கின்றோம்.

எனவேதான் புத்தகக் கல்வியானது மனித வாழ்வில் இன்றியமையாததாக காணப்படுகின்றது. இந்த புத்தகமானது நிறைய வகைகளை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. இந்த வகையில் கின்னஸ் எனும் உலக சாதனையை பதிவு செய்யும் புத்தகமானது மிகவும் முக்கியமானதாக கொள்ளப்பட்டாலும் அதனை நான் தேவையற்ற ஒன்றாகவே நான் பார்க்கின்றேன். காரணம் என்ன வென்றால் ஒருவர் 24 மணித்தியாலங்களாக தொடர்ச்சியாக பேசி சாதனை படைத்தார் என்பதனை அப்புத்தகத்தில் சாதனையாக பதிவு செய்கின்றனர். ஆனால் அதனை 24 மணித்தியாலமும் அமைதியாக கேட்டிருந்தவர்களை சாதனையில் பதியவில்லை  இதனால்தான் நான் அதனைக் கூறுகின்றேன்.

இங்கு வெளியிடப்படும் புத்தகமானது  சமூகத்திற்கு அழிக்க முடியாத சொத்தாக காணப்படுகின்றது. மரணம் என்பது ஒருசாதனையாளருக்கு முற்றுப்புள்ளியல்ல ஏன் என்றால் விபுலானந்தர், விவேகானந்தர், காந்தியடிகள் போன்றோர் மரணித்த பின்பும் இன்றும் எமது மனங்களில் குடி கொண்டவர்களாகவும், தினமும் நினைத்து பேசக் கூடியவர்களாகவும், உள்ளமை இதற்கு பெரிய சான்றாக உள்ளது
 
பெரிய வைத்தியர்களாக இருக்கலாம், வேறு பெரிய பதவிகளில் இருப்பவர்களாகலாம், அல்லது பெரும் பணக்காரனாகக்கூட இருக்கலாம் இவர்கள் இவ்வாறு இவ்வுலகில் இருக்கும் போது சமூகத்திற்கு என்ன செய்துள்ளனர் என்பதை வைத்தே பேசப்படுபவர்களாக இருக்கமுடியும்.

அந்த வகையில் எனது ஆசிரியரான இப் புத்தக வெளியீட்டு ஆசிரியர் தம்பிப்பிள்ளை அவர்கள் போற்றுதற்கு உரியவர் காரணம். கற்றல் என்பது ஒன்றுதான். ஆனால் எங்கு கற்றுக் கொள்கின்றனர் என்பதைவைத்து மாறுபடும்.

பூவை கசக்குகின்றவன் அதிலிருந்து வாசனையை கற்றுக் கொள்கின்றான். அந்த வகையில் இவ் ஆசிரியரிடம் இருந்து நான் அன்பு, பண்பு, கருணை, போன்றவற்றை எனத மாணவப் பருவத்தில் இருந்து நான் கற்றுக் கொண்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: