2 Jan 2015

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் முகமாக விஷேட சந்திப்பு

SHARE
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் முகமாக மட்டக்களப்பு தேர்தல் தொகுதியிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்கள், கட்சி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் ஆகியோருடனான விஷேட சந்திப்பொன்று (30) நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காத்தான்குடியிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் மட்டக்களப்பு தொகுதி தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முகவரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் இடம்பெற்ற இந்த விஷேட சந்திப்பில் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கலந்து கொண்டார்.

மேலும் இச் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முகவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களான அருன்தம்பி முத்து, சாணக்கியன் இராசமாணிக்கம், அலிசாஹிர் மௌலானா உள்ளிட்ட பலர் கொண்டனர்.

இதன்போது 2015 ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெருமளவு ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டது.

இங்கு அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த 2015 ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விஷேட உரை நிகழ்த்தினார்.
SHARE

Author: verified_user

0 Comments: