சவூதி மன்னர் அப்துல்லா இன்று (23) வௌ்ளிக்கிழமை அதிகாலை 01 மணியளவில் காலமானார் . அவர் மரணமடையும் போது அவருக்கு வயது 90.
அவரது மரணத்தைத் தொடர்ந்து சவூதி
அரேபியாவின் புதிய மன்னராக அவரது சகோதரர் சல்மான் பதவியேற்பார் என்று
அந்நாட்டு அரசவை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி மன்னர் அப்துல்லா அதிகாலை 01 மணியளவில் இறந்துள்ளதாக அந்நாட்டு அரச சேவை தொலைக்காட்சி செய்தியில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மன்னர் அப்துல்லா பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில், அவரது சகோதரர் சல்மான் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.
சவூதி மன்னர் அப்துல்லாவின் மரணத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பலரும் சவூதி மக்கள் அனைவரும் தமது பலமான குரலை இழந்து விட்டனர் என தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மன்னர் அப்துல்லா சவூதி மக்களுக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், "இஸ்லாமியர்களிடையே மிகப் பெரிய சக்தியாக திகழ்ந்தவர் அப்துல்லா. அவரது துணிவான நடவடிக்கைகளும், மற்ற நாடுகளுடன் அவர் கொண்ட நட்புறவும் பாராட்டுக்குரியது. அமெரிக்காவுக்கும் சவூதிக்கும் இடையேயான உறவுக்கு அவர் மிகப் பெரிய தூண்டுதலாக திகழ்ந்தார். அவரது மறைவு எனக்கு வேதனை அளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment