2015ஆம்
ஆண்டுக்கு முதலாம் தரத்தில் புதிய மாணவர்களை இணைக்கும் நிகழ்வு இன்று (19) ,
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட சித்தாண்டி விநாயகர்
கிராமம் அலைமகள் பாடசாலையில் பாடசாலையின் அதிபர் பூபாலப்பிள்ளை
சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
பாடசாலைக்கு முதலாவதாக காலடியெடுத்து
வருகைதந்த மாணவர்களுக்கு பாடசாலையின் சிரேஸ்ட மாணவர்களினால் மலர் மாலை
அணிவிக்கப்பட்டு மிகவும் உற்சாகமாக கைகளைத்தட்டி வரவேற்றதுடன் மாணவர்களின்
கைகளில் பலூன்களையும் கொடுத்து வரவேற்றனர்.
இந்நிகழ்வில் கல்குடா கல்வி வலயப்
பிரதிக்கல்வி பணிப்பாளர் (கல்வி முகாமைத்துவம்) தினகரன் ரவி, கல்குடா கல்வி
வலய ஆரம்ப கல்விப் இணைப்பாளர் எஸ். யோகராசா, கல்குடா கல்வி வலய விசேட
கல்வி ஆசிரிய ஆலோகர் கே.சிவராசா, வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய அதிபர்
எஸ்.பகிதரன், பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என
பலர் கலந்துகொண்டிருந்தனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை மாணவர்களின் வரவு 59 ஆக அதிகரித்துள்ளதென பாடசாலையின் அதிபர் சுந்தரலிங்கம் தெரிவித்தார்.
இன்று நாடு பூராவும் உள்ள பாடசாலைகளில்
முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைக்கும் தேசிய நிகழ்வு கல்வி அமைச்சினால்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment