6 Jan 2015

இரசிகைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்

SHARE
சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தனது இரசிகை ஒருவரை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் அர்ச்சனா என்பவருக்கு அபூர்வ வகை நோய் ஒன்று தாக்கியுள்ளது.
இந்நிலையில் அர்ச்சனா நடிகர் விஜய்யை நேரில் சந்திக்க வேண்டும் என்று தனது பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். அவருடைய விருப்பதை நிறைவேற்றை அந்த பகுதி விஜய் இரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் விஜய் அணுகியுள்ளார்.

அவர்களுடைய முயற்சியால் விஜய் சமீபத்தில் அதுவும் அர்ச்சனாவின் பிறந்த நாளில் அவருடைய வீட்டிற்கு சென்று அர்ச்சனாவிடம் ஆறுதலாக சில நிமிடங்கள் பேசியுள்ளார்.

தனது பிறந்த நாளில் விஜய்யை நேரில் பார்த்த அர்ச்சனாவுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பின்னர் அர்ச்சனாவை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படியும் எந்த உதவியையும் தன்னிடம் தயங்காமல் கேட்கலாம் என்று கூறிவிட்டு விஜய் விடைபெற்றார்.

விஜய்யின் திடீர் வருகை அந்த பகுதி மக்களை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: