தமிழ் பேசும் மக்களுடைய சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் அதாவது காணி, மீள்குடியமர்வு, காணாமல் போனோர், சிறையில் வாடும் இளைஞர்கள், போரினால் உருவான விதவைகள், இராணுவப் பிரசன்னம், மதுபானசாலைகளின் அதிகரிப்பு, தொழிலின்மை, கல்வி, சுதந்திரமான செயற்பாடு என்பவை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் நீண்டகாலமாக தீர்க்கப்படாத நிலையில் இருந்து வருகின்றன.
என மட்டக்ளப்பு மாவட்ட சிவில் அமைப்பு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று புதன் கிழமை (14) அனுப்பியுள்ள கடித்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அக்கடித்தில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது……என மட்டக்ளப்பு மாவட்ட சிவில் அமைப்பு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று புதன் கிழமை (14) அனுப்பியுள்ள கடித்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே 27,000 க்கு மேற்பட்ட போர் விதவைகள் கவனிப்பாரற்ற நிலையிலும் 45 வீதத்துக்கு மேற்பட்ட பாடசாலை இடைவிலகலும், 55 க்கு மேற்பட்ட மதுபான விற்பனை நிலையங்களும், தொழில் இன்றிய ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளும், 16,000 க்கு மேற்பட்டோர் நிரந்தர வீடற்ற நிலையிலும் வரட்சிக்காலத்தல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடிநீருக்கு அலைகின்ற பரிதாப நிலையும் காணப்படுகின்றது.
இந்த நாட்டின் உயர் பதவியை அதாவது நாட்டுத் தலைமையைப் பொறுப்பெடுத்துக் கொள்ளுகின்ற மேன்மை தங்கிய புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகிய நீங்கள் புதிய பிரதமராக பதவியேற்றிருக்கின்ற கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களதும் உங்களோடு இணைந்திருக்கின்ற ஏனைய தலைவர்களதும் துணையோடு தமிழ் பேசும் மக்கள் அனுபவித்து வருகின்ற பிரச்சினைகளை தீர்த்து இம்மக்களும் பெரும்பான்மை சமூகம் அனுபவித்து வருகின்ற சகல உரிமைகளையும் பெற்று வாழும் நிலமையை ஏற்படுத்துவீர்கள் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் வெகுவாக நம்புகிறது.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் இன, மத, மொழி பேதமின்றியும் எவ்வித பக்கசார்பு இன்றியும்; மக்களது முக்கிய பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கி அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளுக்கு உதவுகின்ற ஓர் அமைப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே பல வருடங்களாக இயங்கி வருகின்ற ஓர் நடுநிலையான அமைப்பாகும்.
தாங்கள் அனுபவித்து வருகின்ற தங்களது பிரச்சினைகளுக்கு ஓரளவாயினும் தீர்வு வரும் என்ற நம்பிக்கையிலும் நாட்டில் பல நல்ல மாற்றங்கள் நிகழும் என்ற எதிர்பார்ப்பிலும், தங்களுக்கு உரிய இடமும் அந்தஸ்த்தும் கிடைக்க வேண்டும் என்ற விருப்பிலும் தமிழ் பேசுகின்ற மக்கள் உங்களுக்கு தங்களது அமோக ஆதரவை அளித்திருக்கின்றார்கள் என்பதை இச்சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது. அதே நேரம் அம்மக்களது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும், விருப்பும் வீண் போகாத வகையில் நீங்கள் செயற்படுவீர்கள் என்றும் சிவில் சமூகம் எதிர்பார்க்கின்றது.
இத்தருணத்தில் தாங்கள் நீண்ட தேகசுகமும் திடமான மனோபலமும் பெற்று நாட்டில் சிறந்த ஆட்சியை மேற்கொள்ளவும் உங்கள் ஆட்சியில் சமாதானமானதும் நிம்மதியானதுமான சமூகம் ஒன்று உருவாக தங்களை மட்டக்களப்பு சிவில் சமூகம் மனதார வாழ்த்துகிறது. என அக்கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்து.
0 Comments:
Post a Comment