இலங்கையின்
புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன
அவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விலாடிமீர் புட்டீன் மற்றும் ஜப்பான் பிரதமர்
சிங்சோ அபே ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு
வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர்
புட்டின் ரஷ்யாவுக்கும் இலங்கைக்குமிடையிலான நட்புறவுகளை தாம் பெரிதும்
மதிப்பதாகவும் இருநாடுகளுக்குகிடையேயான இருதரப்பு உறவுகளை மேலும்
பலப்படுத்த தான் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் இலங்கை சனநாயக சோசலிசக்
குடியரசின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன அவர்களுக்கு தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகக்
குறிப்பிட்டிருக்கும் ஜப்பானிய பிரதமர் சிங்சோ அபே இரண்டு
நாடுகளுக்கிடையேயான நீண்டகால நட்புறவின் அடிப்படையிலான இருதரப்பு உறவுகளை
மேலும் பலப்படுத்த தாம் நெருங்கிப் பணியாற்ற விரும்புவதாகவும்
தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தின் சுபீட்சத்திற்காக
ஒன்றிணைந்து பங்களிப்புகளைத் தாம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்
மேலும் தெரிவித்துள்ளர். தேசிய நல்லிணக்கத்தை அடைந்து கொள்வதற்கான
இலங்கையின் முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்புகளை
வழங்கும் என்றும் அவர் அச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment