கிழக்கு மாகாண முதலமைச்சராக வருபவர் தமிழராக இருக்கவேண்டும் என்பதில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைகள் உறுதியாக இருப்பதுடன், தற்போது தமிழர்
ஒருவரை தவிர எந்த சந்தர்பத்திலும் வேறு ஒருவர் முதலமைச்சராக வரமுடியாது என
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்.
மேலும் கிழக்கு மாகாணசபையில் 11 உறுப்பினர்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, முதலமைச்சரை கேட்பது நியாயமானது. ஆனால் 7 உறுப்பினர்களை கொண்ட முஸ்லிம் காங்கிஸ் முதலமைச்சரை கேட்பது எந்த விதத்தில் நியாயமானது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் யுத்ததினால் அங்கங்களை இழந்து, குடும்பங்களை இழந்து வாழ்வாதாரத்தை கொண்டு செல்லமுடியாமல் தத்தளிக்கின்றவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்காக சுவிற்சலாந்து தமிழர் இந்து கலாச்சார ஒன்றியத்தின் அனுசரனயுடன் முதற்கட்டமாக 12 பேரை தெரிவு செய்து தலா 25 ஆயிரம் ரூபா வீதம் 3 இலட்சம் ரூபாவை வழங்கும் நிகழ்வு நேற்று (18) மாலை ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் க.இரத்தினவேல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த நாட்டிலே நெடுங்காலமாக தமிழ் மக்கள் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து கொண்டிருப்பதுடன் சகோதரர்கள், தாய் தந்தையர்களையும் அவர்களது அங்கங்களையும் இழந்து வாழமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் கவனிப்பார் அற்ற முறையிலே இருந்து கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மக்கள் பாதிக்கப்படடிருக்கின்றார்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை ஒரு நிவாரணமும் வழங்காதிருப்புது ஒரு குறையாகவே இருந்து கொண்டிருக்கின்றது இவ்வாறான நிலமையை போக்கவேண்டும் என்பதற்காக புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புக்கள் மூலம் கட்டம் கட்டமாக இந்த பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
ஜனாதிபதி தேர்தலில் மாற்றம் பெற்றவுடன் கிழக்கு மாகாணசபையை தமிழர்கள் ஆளக்கூடிய சாதாரண நிலமை ஏற்பட்டிருக்கின்றது 2012 ம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் த.தே.கூட்டமைப்பு 11 உறுப்பினர்களையும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் பெற்றிருந்தது அந்த காலகட்டத்தில் த.தே.கூ. தலைவர் சம்மந்தன் முஸ்லிம் காங்கிரஸ்சிடம் அழைப்பு விடுத்திருந்தார்.
நாங்கள் தமிழ்பேசுகின்ற சிறுபான்மை சமூகங்களாக இருக்கின்ற இரு சமூகங்களும் இணைந்து கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரங்களை பிடிக்கவேண்டும் என்ற கருத்தினைக் கூறியிருந்தார்
இதில் முதலமைச்சராக முஸ்லிம் இந்தால் பரவாயில்லை எனவும் ஏனைய அமைச்சுப் பதவிகளையும் முஸ்லிம் காங்கிரசுக்கு கொடுத்து மாகாண சபையை அமைக்கவேண்டும் என்கின்ற முயற்சியிலே பல முன்னெடுப்புக்களை முன்னெடுத்திருந்தார் இப்போது இவ்வாறான விடயங்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் செவிசாய்க்காமல் சுய லாபங்களுக்காக அரசோடு ஒட்டிக்கொண்டு இந்த மாகாண சபையில் பெரும்பான்மையினரான ஒரு அமைச்சரை தவிர மதலமைச்சம் மற்றும் அமைச்சுக்களை முஸ்லிம் காங்கிரஸ் வசமாகியது அப்பொழுது திட்டமிட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் அதேவேளை வழங்கப்பட்ட எந்த நியமனங்களாக இருந்தாலும் நேரடியாகவும் சமூகரீதியாகவும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது.
அந்த விடயத்தில் நாங்கள் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தோம் பல விடயங்களை மாகாண சபையில் பிரஸ்தாபிக்கப்பட்ட பொழுது நியாயங்கள் மறுதலிக்கப்பட்டன ஒவ்வொரு விடயங்களிலும் நியாயங்கள் மேலோங்காமல் அநீதிகள் தான் இடம்பெற்றிருந்தன.
ஆனால் இந்த மாற்றத்தின் பிறகு தற்போது த.தே.கூட்டமைப்பு ஆட்சி அமைக்கக்கூடிய சூழல் இருக்கின்ற இந்த காலகட்டத்தில் இப்பொழுது முஸ்லிம் காங்கிரஸ் கூறுகின்றார்கள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக முஸ்லிம் வரவேண்டும் என ஆனால் தமிழர்கள் முதலமைச்சராக இருக்கவேண்டும் என எமது தலைமைகள் அதிலே உறுதிகாக இருக்கின்றார்கள்.
ஆனால் நாங்கள் ஒரு இன்கப்பாடுடன் அவர்களுடன் பேசினோம். தமிழர் ஒருவர் முதலமைச்சராகவும் ஏனைய அமைச்சு பதவிகளை முஸ்லிம்களை உள்ளடக்கி இந்த மாகாண சபை அமைக்கவேண்டும் என்ற விடயத்திலே கடந்த சில தினங்களாக பல சுற்றுப் பேச்சு வார்த்தை நடந்திருக்கின்றது ஆனால் எதுவுமே வெற்றியளிக்கவில்லை.
பல நெடும்காலமாக பாதிக்கப்பட்ட மக்களாக தமிழர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள் மத்திய அரசாக இருந்தாலும் மாகாண அரசாக இருந்தாலும் எந்த ஆட்சிப் பெறுப்பிலும் தமிழர்கள் இருந்த வரலாறே இல்லை அவ்வாறு கபாதிக்கப்பட்ட ஒர் இனம் ஒரு நல்ல கூழல் உருவாகின்ற பொழுது இந்த மாகாண சபை அமைக்கின்ற பொழுது ஒத்துழைப்பு வழங்கவேண்டிய இந்த முஸ்லிம் காங்கிரஸ் அவர்களுடைய பதவிகளுக்கும் பட்டங்களுக்குமாக எங்களோடு ஒத்துழைக்க மறுதலிக்கின்றனர்
அது எந்தவகையில் நியாயமாக இருக்கும் சிறுபான்மை சமூகங்களின் விடுதலைக்காக பாடுபடுகின்ற த.தே.கூட்டமைப்பு அவர்களுக்கு பல சந்தர்ப்பம் வழங்கியிருக்கின்றது நாங்களும் அந்த விடயத்தில் உறுதியாக இருந்திருக்கின்றோம் ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் தமிழரை தவிர கிழக்கு மாகாணத்திலே தற்போது ஒரு முதலமைச்சரும் வரமுடியாது என்கின்ற ஆணித்தரமான கருத்தை கூறிவைக்கின்றேன் என்றார்
இவ் நிகழ்வில் அதிதிகளாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கோபிநாத். ஆலையடிவேம்பு பிரதேச சபை உப தவிசாளர் சியாம் சுந்தர், உறுப்பினர்களான நித்தியானந்தன், காளிதாசன், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான ஜெயக்குமார், கமல், கிழக்கு மாகாணசபை உறப்பினர் ரி .கலையரசனின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் நிதிகளை வழங்கிவைத்தனர்.

0 Comments:
Post a Comment