24 Jan 2015

காத்தான்குடியில் சர்வதேச சிறுவர் தினத்தையொட்டிய பரிசளிப்பு வைபவம்

SHARE
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தினத்தையொட்டிய பரிசளிப்பு வைபவமொன்று நேற்று  (22) வியாழக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன், மற்றும் காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி ஏ.எல்.பதுர்தீன், காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், திவிநெகும திணைக்களத்தின் காததான்குடி பிரதேச அதிகாரி ஏ.எல்.சுல்மி, உட்பட சிறுவர் அபிவிருத்தி அதிகாரிகள் முக்கியஸ்தர்கள் பிரதேச செயலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது சமுர்த்தி திட்டத்தினூடாக காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள சமுர்த்தி பயணாளிகள் குடும்பத்தைச் சேர்ந்த 35 மாணவர்களுக்கு சிசுதிரிய புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கப்பட்டதுடன் போட்டி நிழ்ச்சிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

vcnbvn1


unnamed
n
SHARE

Author: verified_user

0 Comments: