-ஆர்.ரோஸன்-
திருகோணமலை மண்ணில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜன் மற்றும் கொழும்பிலே படுகொலை செய்யபட்ட சன்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க ஆகிய ஊடகவியலாளர்களின் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையின் வாரந்த செய்தித்தாளான மலைமுரசு மற்றும் திருகோணமலை ஊடகவியலாளர்கள் மற்றும் முத்தமிழ்ச் சங்கம் ஆகியோர் இணைந்து இன்று 31.012.2015 மாலை 4.00 மணியளவில் திருகோணமலை நகரசபையின் நகர மண்டபத்தில் நடாத்தினர்.
இந்நிகழ்விற்கு சிரேஸ்ட தமிழ் ஊடகவியலாளர் என்.வித்யாதரன் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.இந்நிகழ்விற்கு திருகோணமலையைச் சேர்ந்த அரசியல் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் சட்டத்தரணிகள் .கல்விமான்கள் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் என நூற்றுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கு மலைமுரசு பத்திரிகையின் ஆசிரியர் திரு.மாயன் அவர்கள் தலைமை தாங்கினார். தொடர்ந்து அவருடைய தலைமை உரையில் லசந்த எழுத்தானியுடன் களத்தில் எனும் தலைப்பில் உரையாற்றினார்.
தொடர்ந்து சுகிர்தராஜன் ஒரு தனி மனிதனாக... எனும் தலைப்பில் ஊடகவியலாளர் பொ.சற்சிவானந்தம் அவர்களும் திருகோணமலை ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய நோக்கும் சவால்கள் எனும் தலைப்பில் வடமலை ராஜ்குமாரும், சுகிர்தராஜன் ஒரு நண்பனாக எனும் தலைப்பில் ஊடகவியலாளர் அ.அச்சுதனும், உரையாற்றினார்கள்.
அதே வேளை ராஜனின் நினைவு மீட்டல் எனும் கவிதையை ஊடகவியலாளர் சாலி வாசித்தார்.
இறுதியாக இடம் பெற்ற அதிதி உரையில் சிரேஸ்ட தமிழ் ஊடகவியலாளர் என்.வித்யாதரன் அவர்கள் உரையாற்றும் போது தான் திருகோணமலை மண்ணின் மைந்தன் என தெரிவித்தார் அவர் திருகோணமலையில் பிறந்ததையும் இங்குள்ள மூத்த ஊடகவியலாளர் குருநாதன் அவர்களுடன் கழித்த காலங்களையும் மிட்டினார்
அத்துடன் திருகோணமலையில் கொலை செய்யப்ட்ட 05 பல்கலைக்கழக மாணவர் படுகொலைக்கும் சுகிர்தராஜனின் கொலைக்கும் உள்ள தொடர்பை தனது உரையில் விளக்கியதுடன் தாம் கடத்தப்பட்ட அனுபவத்தையும் லசந்த விக்கிரமதுங்க அவர்களுக்கும் தமக்கும் இடையே இருந்த தோழமையையும் மற்றும் தமது ஊடக வாழ்வில் கடந்த வந்த பாதைகள் தொடர்பாக இங்கு நினைவு கூர்ந்தார்.
இறுதியாக முத்தமிழ் சங்கத்தின் செயலாளர் வண.பங்குத்தந்தை குருஸ் அவர்களின் நன்றியுரையுடன் மாலை 07 மணியளவில் இந்நிகழ்வு நிறைவடைந்தது.
0 Comments:
Post a Comment