மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மாஞ்சோலை கிராம அலுவலகர் முறைகேடாக நடப்பதாகக் கூறி கடந்த 31ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஓட்டமாவடியில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாஞ்சோலை கிராம அலுவலகர்; பிரிவில் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான மக்கள் அனைவருக்கும் நிவாரணத்துக்கு பதியாமல், தனக்கு விசுவாசமானவர்களுக்கு மாத்திரம் கிராம அலுவலகர் வெள்ள நிவாரணத்துக்கு பதிந்ததாக கடந்த 31ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர். ஆனால், இன்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர், கிராம அலுவலகர் நேர்மையானவர். இலஞ்சம் வாங்காதவர் என்றும் கிராம அலுவலகருடன் தனிப்பட்ட முறையில் பிரச்சினைப்பட்டவர்கள் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். இதற்கு பிரதேச செயலகத்தினால் நிரந்தரத்தீர்வு பெற்றுத்தருவதுடன், கிராம அலுவலகரை இடமாற்றம் செய்யவேண்டாம் என்றும் தெரிவித்தனர்.
இவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், தற்போது ஜனாதிபதித் தேர்தல் காலம் என்றபடியால், இடமாற்றங்கள் எதுவும் நடக்காது. கிராம அலுவலகரினால் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளானவர்களின் பெயர்ப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment