18 Jan 2015

பிள்ளையான், கருணாவை கட்சியில் இணைக்கக் கூடாது என முடிவு

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் காலங்களின் போது, பல்வேறு அட்டூழியங்களைச் செய்தவர்களை அரசாங்கத்தில் இணைக்கக் கூடாது என மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி மத்தியகுழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி மத்தியகுழு கூட்டம் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அ.சசிதரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கல்குடா தொகுதி அமைப்பாளர் மாசிலாமணி உட்பட தொகுதி மற்றும் பிரதேச அமைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

கட்சியினை பலப்படுத்தி எதிர்கால செயற்பாடுகளை முன்கொண்டு செல்லுதல் மற்றும் தற்போதைய அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அ.சசிதரன்,

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பிள்ளையான், மோகன், அலிஸாகீர் மௌலான ஆகியோரை ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்வாங்க கூடாது என்ற தீர்மானம் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பொது எதிரணிக்குள் அவர்களை உள்வாங்குவதையும் இணைக்ககூடாது என்பதில் உறுதியாகவுள்ளோம்.

1978ஆம் ஆண்டு காலப்பகுதியில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மாவட்டத்தில் இருந்துள்ளனர். இதனை மனதில்கொண்டு ஐக்கிய தேசிய கட்சியில் ஒரு பிரதிநிதியையாவது இந்த மாவட்டத்தில் இருந்து அனுப்பவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், என்றார்.
SHARE

Author: verified_user

0 Comments: