10 Jan 2015

மாற்றாத்திற்காகத்தான் எமது மக்கள் வாகளித்தார்களே தவிர ஏமாற்றத்திற்காக அல்ல கி.மா.உ கருணாகரம் (ஜனா)

SHARE
மாற்றம் ஒன்றே மாறாதது மைத்திரி நிர்வாகத்தில் அம்மாற்றம் எமக்கு சாதகமாக அமையும் என்று நம்புவோமாக. மாற்றாத்திற்காகத்தான் எமது மக்கள் வாகளித்தார்களே தவிர ஏமாற்றத்திற்காக அல்ல.

என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,
தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளானர்.


புதிய ஜனாதிபதியின் தேர்தல் முடிவு தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது.


அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…..


நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு தமிழப் பேசும் மக்கள் என்றும் எப்போதும் சவாலாக இருந்ததோ இருக்கப்போவதோ இல்லை மாறாக சுயநல பதவி மோகம்  கொண்ட தென்னிலங்கை அரசியல் வாதிகளின் செயற்பாடே தேசிய அரசியலில் இருந்து தமிழ்ப்பேசும் மக்களை ஒதுக்கி வைத்துள்ளது என்பதற்கு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

பல தசாப்த காலமாக தீர்க்கப்படாத இனப்பிரச்சினை நாட்டில் புற்றுநோயாக புரையோடிப்போயுள்ளது என்பதை உணர்ந்தும் அதன் தீவிரத்தன்மை அதன் தீர்வு தொடர்பான அரசியலை உணர்ந்தும் அதுபற்றி பேசுவதற்கோ ஏன் மூச்சு விடுவதற்கோ எத்தரப்பும் விரும்பாத அரசியல் போக்கே ஜனாதிபதி தேர்தலை ஒட்டிய காலங்களில் நாம் தென்னிலங்கையில் தெளிவாகக் கண்டோம்.

இருந்தும் இத்தேர்தல் பலவிடயங்களை தெளிவாக உணர்த்தியுள்ளது. தேசிய அரசியல் இருந்து சிறுபான்மை மக்களை ஒதுக்க நினைத்து அவர்களை இனவாதிகள், மதவாதிகள், பிரிவினைவாதிகள் என்ற கருத்தியலை தென்னிலங்கையில் விதைக்க நினைத்தவர்களுக்கு நாம் தென்னிலங்கை அரசியல் போக்குடன் கைகோர்க்க தயாராக உள்ளோம் என்பதையும் பிரிவினைவாதிகளது புலம் பெயர் தமிழர்களதும் முகவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தென்னிலங்கை மக்களிடம் காட்ட நினைத்தவர்களுக்கு களநிலமைகளின் யாதார்த்தத்தை உணர்ந்து மாற்றத்துக்கான மைத்திரி நிர்வாகத்துக்கு தனது பங்களிப்பை வழங்கி இலங்கையில் உருவான புதிய அரசியல் கலாசாரத்துக்கு தனது பங்களிப்பை வழங்கி சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்து தமிழ்க் தேசியக் கூட்டமைப்பு தனது உண்மையான நேர்மையான சரியான பிம்பத்தை தென்னிலங்கைக்கு உணர்த்தி அம்மக்களது நியாயமான அரசியல் அபிலாசைகளை ஜனநாயக வழிமுறைக்குள் தீர்ப்பதை எமது அரசியல் இலக்கு என்பதையும் உணர்த்தியுள்ளது.

காலம் காலமாக எமது மண்ணையும் மக்களையும் அடக்கி ஒடுக்கி ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலையில் வைத்திருந்த சத்திய ஆவேசத்தின் வெளிப்பாடாகவும் தமிழ் மக்களது வாக்களிப்பு முடிவினை நோக்கலாம்.

வடகிழக்கில் எம்மக்களது அபிலாசைகளுக்கு குறுக்காக தடையாக இருந்த மகிந்தவுக்கு ஆலவட்டம் பிடித்த முன்னாள் போராளிகள், ஆலோசகர்கள் அமைச்சர்கள் இன்னும் எங்கிருந்தோ இடையில் புகுந்து சிலகாலம் அட்டகாசம் புரிந்த ஒட்டுண்ணிகளுக்கும் பச்சோந்திகளுக்கும் கூட எம்மக்கள் இத்தேர்தல் மூலம் சரியான பாடம் கட்டி காறி உமிழ்ந்துள்ளனர்.

பறக்க நினைத்து இருந்ததை இழுத்து நிற்கும் மகிந்தவின் கடந்த கால அரசியல் செயற்பாடுகள் புதிய ஜனாதிபதிக்கு இனப்பிரச்சினை தொடர்பான தனது அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ள சரியான வழிகாட்டியாக இருக்கும். இருக்க வேண்டும் என்பதையும் இத்தேர்தல் முடிவுகள் புலப்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்தமாக தேர்தல் முடிவுகள் புரையோடிப்போன தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டிய அவசியத்தை அவசரத்தை நாட்டின் புதிய தலைமைக்கு எடுத்தியம்பியுள்ளதுடன் தேசிய, சர்வதேச எதிர்பார்ப்பும் அதுவாகவே உள்ளது என்பதையும் எம்மக்களது முடிவு தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

மாற்றம் ஒன்றே மாறாதது மைத்திரி நிர்வாகத்தில் அம்மாற்றம் எமக்கு சாதகமாக அமையும் என்று நம்புவோமாக. மாற்றத்திற்காகத்தான் எமது மக்கள் வாகளித்தார்களே தவிர ஏமாற்றத்திற்காக அல்ல.
SHARE

Author: verified_user

0 Comments: