29 Jan 2015

அரசாங்கத்தினால் பல குழுக்கள் அமைக்கப்பட்டு விடையங்கள் ஆராயப்பட்டு வருகின்றன – பொன்.செல்வராசா எம்.பி

SHARE
சிறையிலே வாடிக்கொண்டிருக்கின்ற எமது இளைஞர்கள், தமது சொந்த நிலங்களை இழந்த எமது மக்களின் காணிகள், அனைத்தினையும் விடுவிப்பதற்காக வேண்டி தற்போதைய அரசாங்கத்தினால் பல குழுக்கள் அமைக்கப்பட்டு விடையங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.


என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை படுகொலையின் 28 வது ஆண்டு நினைவு நாள் புதன் கிழமை (28) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிப்பளைப் பிரிவினால் ஏற்பாட்டின் கீழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


இதன்போது மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா……


பிரபல்யம் வாய்ந்த கொக்கட்டிச்சோலை படுகொலைச் சம்பவத்தை சர்வதேச அரங்கிற்குக் கொண்டு சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த, சந்திரா பெர்னாண்டோ அடிகளார், மற்றும் எமது கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் ஆகியோரும் இந்த மட்டக்களப்பு மண்ணிலே படுகொலை செய்யப்பட்டார்கள். எனவே படுகொலைகளுக்கு நீதி தேடி சர்வதேசம் வரைச் கொண்டு சென்ற இரண்டு பெரிய மாகான்களும் இந்த மண்ணிலே படுகொலை செய்யப் பட்டுள்ளார்கள் என்பது வரலாற்று உண்மையாகும்.

காலம் காலமாக இலங்கையை ஆண்டு வந்த கடந்த அரசாங்கங்கள் 1983 ஆம் ஆண்டு தொடக்கம், 2015.01.08 ஆம் திகதி வரைக்கும், பல படு கொலைகளைச் செய்து கொண்டேதான் இருந்தார்கள்.

கடந்த வருடம் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு தினத்தை இதே மண்டபத்தில் நடாத்துவதற்று அன்றிருந்த அரசாங்கம் தடுத்தது. ஆனால் அந்த நிலமை தற்போது இல்லாமல் போயுள்ளது.

முன்பிருந்த அரசாங்கத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக இலங்கை வாழ் மக்கள் குறிப்பாக சிறுபான்மை மக்கள் கங்கணம் கட்டியிருந்தார்கள். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டுத்தவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்சதான்.

மஹிந்தராஜபக்ச மேலும் இரண்டு வருடங்கள் ஆட்சியில் இருந்திருக்க முடியும். அதனைவிடுத்து அவர் தேர்தல் ஒன்றை நடாத்தி தோல்வியடைந்திருக்கின்றார். இது எமக்கு கடவுள் கொடுத்த வரம்ஆகும். கடவுக் கொடுத்த வரத்தினால்தான் நாட்டில் தற்போது நல்ல சமாதானம் ஏற்பட்டிருக்கின்றது.

பல பிரச்சனைகள் இருக்கின்றபோதிலும் தற்போதைய அரசாங்கம் அனைத்து மக்களையும் ஓரளவு சமமாக வழிநடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றது. இவ்வாறான நிலை தொடருமாக இருந்தால் நிட்சயம் ஒரு நல்ல எதிர்காலம் நமக்குக் கிடைக்கும்.

முன்பிருந்த அரசினை மாற்றி புதிய அரசாங்கம் அமைவதற்கு சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும், நல்லதொரு சந்தர்ப்பம் வழங்கியது. கடந்த கால ஆட்சியிலே சிறுபான்மையினம் நசிக்கப்டப்பட்டிருந்தது. தற்போது விடிவுகாலம் பிறந்துள்ளது.

எமது பிரச்சனைகளை தயக்கமின்றி அரசிற்கு எடுத்தியம்பலாம், நாங்கள் அரசாங்த்திற்கு அடிபணிய வேண்டிய அவசியமில்லை காரணம் நாங்கள் அமைச்சுப் பதவிக்குத் துணைபோகவில்லை. அமைச்சுப் பதவி எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குத் தடயாக இருக்கலாம். அரசு சிலவேளைகளில் தவறுகள் விடுகின்றபேது நாங்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருந்தால் அதனை இழக்க நேரிடலாம். ஆமைச்சுப் பதவி எமக்கு ஒரு தடையாக இருக்கக் கூடாது போன்ற பல காரணங்களுக்காக நாங்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்கவில்லை.

எங்களுடைய இலக்கிற்கு தடையாக இருக்கின்ற காரணத்தினால்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்த விதஅமைச்சுப் பதவிகளையும் பொறுப்பேற்க வில்லை.

இந்த அரசாங்கத்தில் நல்ல காரியங்கள் நடக்கின்றபோது ஆதரவையும், தப்பான காரியங்கள் நடைபெறுகின்றபோது எதிர்ப்பினையும் காட்டவுள்ளோம்.

தற்போதைய அரசாங்கத்திற்காக வேண்டி அனைத்து விடையங்களுக்கும்,  நாங்கள் கை உயர்த்தும் நிலையில் இல்லை.
சிறையிலே வாடிக்கொண்டிருக்கின்ற எமது இளைஞர்கள், தமது சொந்த நிலங்களை இழந்த எமது மக்களின் காணிகள், அனைத்தினையும் விடுவிப்பதற்காக வேண்டி தற்போதைய அரசாங்கத்தினால் பல குழுக்கள் அமைக்கப்பட்டு விடையங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

எமது இலக்குகளுக்கு தற்பேதாதைய அரசாங்கம் பச்சைக்கொடி காட்டி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. புதிய ஜனாதிபதி சிறுபான்மையினம் நசுக்கப்படக் கூடாது என்பதற்காக பல வேலைத் திட்டங்கைள முன்நெடுத்துள்ளார்.
 
இருந்த போதிலும் எமது முக்கிய பிரச்சனையான இனப் பிரச்சனைக்குரிய தீர்வு கிடைக்குமா என்பது தொடர்பில் ஆராயடப்பட வேண்டியவர்களாக இருக்கின்றேம்.  ஓவ்வொரு பிரச்சனைகளாக பூர்த்தி செய்தி கொண்டு போகும் நிலையில் இறுதியில் இனப்பிரச்சனைக்கும் திர்வு காணவேண்டியவர்களாக நாம் இருந்து கொண்டிருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: