20 Jan 2015

கிழக்கு மாகாண ஆளுநர் தனது பதவியை இராஜினாமா செய்தார்

SHARE
கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சற்று நேரத்துக்கு முன் தொலைநகல் மூலமாக அனுப்பி வைத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

2006ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி முதல் ஆளுநராக கடமை புரிந்த இவர், கிழக்கு மாகாணத்தின் முதலாவது ஆளுநருமாவார்.
SHARE

Author: verified_user

0 Comments: