அமெரிக்காவில் சர்வதேச இந்தி மொழி மாநாடு: உலகெங்கும் உள்ள இந்தி பண்டிதர்கள் பங்கேற்பு-
அமெரிக்காவின்
நியூ ஜெர்ஸி மாகாணத்தில் சர்வதேச இந்தி மொழி மாநாடு வரும் ஏப்ரல்
மாதத்தில் நடைபெற இருப்பதாக அம்மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் இன்று
தெரிவித்தனர்.
”உலகம் முழுவதும் இந்தி மொழி விரிவாக்கம்:
சாத்தியங்கள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கம் நடைபெற
உள்ளது. வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த
கருத்தரங்கில் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்தி பண்டிதர்கள் கலந்து
கொள்ள உள்ளனர்.
இதில் ’உயர் கல்வியில் இந்தி’, ‘தனியார் மற்றும்
அரசுப்பள்ளிகளில் மொழிக்கல்வியின் தேவைக்கான ஒருங்கிணைந்த முயற்சிகள்’,
’இந்தி கற்பிப்பது மற்றும் கற்றுக் கொள்வதில் தற்போதுள்ள நிலை’ ,
‘வியாபாரம் மற்றும் வர்த்தகத்தில் இந்தி விரிவாக்கம்’ மற்றும் மொழி
தொடர்பான நிறைய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில்
இந்தியாவைச் சேர்ந்த இந்தி வல்லுநர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆய்வுகளைப்
பகிர்ந்து கொள்வார்கள் என்றும் இந்த கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் அசோக்
ஓஜா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment