மக்கள் வழங்கியுள்ள ஆணைக்கு நாம் தலை வணங்குகின்றோம். அதற்காக வேண்டி எமது கட்சி சார்பாக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். என ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அ.சசிதன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை (09) மேற்படி சசிதரனிடம் தொடர்பு கொண்டு வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்… இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்ககையில்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது பொது வேட்பாளர் 81.62 வீத வாக்குகளைப் பெற்று அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த தேர்தல்களைவிட இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உணர்வு பூர்வமான முறையில் வாக்களித்திருந்தமை சிறப்பம்சமாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம், விவசாயம், நிருவாகம், கைத்தொழில் போன்ற பல விடையங்களை உள்ளடக்கியதாக எதிர் காலத்தில் நாம் பாரிய அபிவிருத்திச் செயற்றிட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
இதுபோன்று எதிர்காலத்திலும் மட்டக்களப்பு மக்கள் தொடர்ந்து எமது பக்கம் இருந்து பாரிய ஒத்துழைப்புக்கள் வழங்குவார்கள் என எதிர் பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment