19 Jan 2015

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில்  சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.புதுக்குடியிருப்பு,மதுபானசாலைக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் கிரான்குளத்தினை சேர்ந்த சாமித்தம்பி தங்கத்துரை(65வயது)என்பவரே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.கிரான்குளத்தில் இருந்து புதுக்குடியிருப்பில் தோட்டத்துக்கு வேலைக்கு சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த கன்டர் வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த அவர் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்..

இது தொடர்பில் குறித்த கன்டர் வாகனம் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.




SHARE

Author: verified_user

0 Comments: