20 Jan 2015

தொடரில் மற்றுமொரு வெற்றியை பதிவு செய்தது நியூசிலாந்து

SHARE
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இன்று (20) நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

நியூசிலாந்தின் நெல்சன் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 276 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஒரு நேரத்தில் 300 ஓட்டங்களை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட இலங்கை குறுகிய இடைவெளியில் விக்கட்டுகளை பறி கொடுத்ததால் 276 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இலங்கை அணி சார்பில் மஹேல 94, சங்கா 76, டில்ஷான் 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பதிலளித்தாடிய நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் ஆறு விக்கட்டுகளை இழந்து 280 ஓட்டங்களை பெற்று 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பில் வில்லியம்சன் 103 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இவரே போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியுடன் தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற ரீதியில் முன்னிலை வகிக்கின்றது.
SHARE

Author: verified_user

0 Comments: