4 Jan 2015

கிழக்கு ஊவா மாகாணங்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

SHARE
நாட்டின் கிழக்கு ஊவா மத்திய சப்ரகமுவ மாகாணங்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

பிரதான நகரங்களின் காலநிலை

அநுராதபுர மாவட்டத்தில் வெப்ப நிலையானது ஆகக்கூடியது 32  செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 22 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு மிதமான காலநிலை காணப்படலாம்.  யாழ்ப்பாண மாவட்டத்தில்  ஆகக்கூடியது 31 செல்சியஸ் பாகையாகவும்  ஆகக் குறைவான வெப்பநிலை 23  செல்சியஸ் பாகையாகவும்  காணப்படும்  அதேவேளை யாழ்ப்பாணம் -  மன்னார் ஆகிய பிரதேசங்களிலும் மிதமான காலநிலை காணப்படும்.

மட்டக்களப்பில் ஆகக்கூடுதலான வெப்பநிலையாக 30 செல்சியஸ்  பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 23  செல்சியஸ்பாகையாகவும் காணப்படும் அதேவேளை மிதமான காலநிலைக்கான சாத்தியம் காணப்படும்.  கொழும்பு மாவட்டத்தில் ஆகக்கூடுதலான வெப்பநிலை 30 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 23 செல்சியஸ் பாகையாகவும்  காணப்படுவதோடு மிதமான காலநிலை காணப்படலாம். கண்டி நுவரெலியா இரத்தினபுரி கொழும்பு காலி மாவட்டங்களில்  சிறிதளவிலான மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டில்  ஆகக்கூடிய வெப்பநிலையாக இரத்தினபுரி மாவட்டத்தில் 32.7 செல்சியஸ்பாகையும் குறைந்தளவு வெப்பநிலையாக  நுவரெலியா  மாவட்டத்தில் 7.7 செல்சியஸ் பாகையும் காணப்படுகிறது.

ஆகக்கூடியளவு மழைவீழ்ச்சி பதிவாகிய பிரதேசம்

டயபொரா எஸ்ரேற் பிரதேசத்தில் ஆகக்கூடியளவு மழைவீழ்ச்சியாக 11.0 மி.மீற்றர் பதியப்பட்டுள்ளது.(nl)
SHARE

Author: verified_user

0 Comments: