மட்டக்களப்பு
மாவட்டத்தில் ஆங்காங்கே ஆரவாரங்களுக்கு மத்தியில் நடக்கின்ற சில
சம்பவங்களை உலகநாடுகள் மத்தியில் பெரியதொரு ஜனநாயக மீறல் நடைபெறுவதுபோலும்
மீண்டும் இங்கு ஆயுதக் கலாசாரம் நடைபெறுவதுபோலும் காட்டப்படுவதாக கிழக்கு
மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்
தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள ஜனாதிபதி தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலானது மிக அமைதியான முறையில் முழுமையான ஜனநாயகத் தன்மைகளோடு நடைபெறவேண்டுமென ஜனாதிபதி பணித்திருக்கின்றார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது பொறுப்பு மிக்க ஜனநாயகக்கட்சி என்ற அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தல் பணிகளை முன்னெடுத்துவருகின்றது.
அந்தவகையில் ஜனாதிபதி மகிந்தவின் வெற்றிக்காக பாடுபடுகின்ற அனைவரையும் ஒன்றிணைக்கின்ற பணியை நான் முன்னெடுத்துவருகின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆங்காங்கே ஆரவாரங்களுக்கு மத்தியில் நடக்கின்ற சில சம்பவங்களை உலகநாடுகள் மத்தியில் பெரியதொரு ஜனநாயக மீறல் நடைபெறுவதுபோலும் மீண்டும் இங்கு ஆயுதக் கலாசாரம் நடைபெறுவதுபோலும் காட்டப்படுகின்றது.
இலங்கை முழுவதும் நடக்கின்ற சம்பவங்களை ஒப்பிட்டுப்பார்க்கும்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை. எங்களுடைய கட்சியின் பெயர் ஆயுதம் சார்ந்த ஒரு பார்வையுடன் ஊடகங்களில் வருவதை நாங்கள் மறுக்கின்றோம். ஊடகங்கள் இங்கு நடைபெறுகின்ற உண்மையான சம்பவங்களை வெளிக்கொண்டுவரவேண்டும்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தமது வாக்குகளை அதிகளவில் ஜனாதிபதி மகிந்தவுக்கு அளிப்பார்கள். இது தமிழ் மக்களுடைய கட்டாய கடமையாகும். மட்டக்களப்பு மாவட்டத்தினுடைய ஒரு பகுதியாக இருந்த தற்போது நிர்வாகத்திற்காக பிரிந்திருக்கின்ற அம்பாறை மாவட்டத்தின் கரையோர மாவட்டம் ஒன்று தரவில்லை அதற்கான அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்து அதை திருப்பியதன் காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறியிருக்கின்றது.
கிழக்கு மாகாணம் பிரிந்தபின்னர் இப்போது அதை ஆண்டுகொண்டிருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸின் அங்கமாக இருக்கின்ற ஒரு சக்தி மீண்டும் அம்மாகாணத்தினுடைய மாவட்டமொன்றின் தனியலகொன்றை உடைத்துக்கொண்டு செல்வதை நாங்களும் தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இனங்களுக்கிடையே குரோதம் வளரக்கூடாது என்பதற்காக அதை நிராகரித்திருக்கின்ற ஒரு தலைவரை ஆதரிக்கவேண்டிய பொறுப்பு கிழக்குமாகாண தமிழர்களுக்கு இருக்கின்றது. கடந்தகால கசப்பான அனுபவங்களை மறந்து கட்சி பேதங்களை மறந்து இம்முறை அனைவரும் ஒன்றிணைந்து மிகப்பெரிய வாக்குப் பலத்தினூடாக ஜனாதிபதி மகிந்தவை வெற்றிபெறச்செய்யவேண்டிய பொறுப்பு தமிழர்களுக்கு இருக்கின்றது.
எதிரணியினர் என்று தெரிந்திருந்தும்கூட எங்களுடைய ஆதரவாளர்களை நிர்ப்பந்தித்து அவர்களுக்கு பிரசுரங்கள் கொடுப்பதென்பது தவறு. அந்த அடிப்படையில் சிறிய சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றது. அது ஜனநாயக நாட்டில் சாதாரணமாக இடம்பெறுகின்ற ஒரு கைகலப்பு. இதை அடிப்படையாகக்கொண்டு எங்களுக்கு சேறு பூசும் பணி இடம்பெற்றிருக்கின்றது.
கடந்த
ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் எதிரணி வேட்பாளரான சரத்
பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கி பின்னர் அரசாங்கத்துடன் சேர்ந்து பதினெட்டாவது
திருத்தச்சட்டத்திற்கு அங்கீகாரம் கொடுத்தது. மாகாணசபைத் தேர்தலில்
தனித்து போட்டியிட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி
நடத்தப்போவதாக ஒரு சூழலை ஏற்படுத்தி பின் அக்கட்சியை ஏமாற்றிக்கொண்டு
அரசாங்கத்துடன் இணைந்துகொண்டது. கிழக்கு மாகாண வரவு செலவுத்திட்டத்தில் அரச
உத்தியோகத்தர்களுடைய சம்பளம்,சாதாரண நடைமுறைச் செலவுகள்,அபிவிருத்தி
நிதிகளை ஒதுக்குகின்ற பணிகளை தோற்கடிப்பதில் பிரதான பங்கை முஸ்லிம்
காங்கிரஸ் வகித்தது. கிழக்கு மாகாணத்தில் ஒரு கொந்தளிப்பு நிலையை
தோற்றுவிக்கவேண்டுமென்பதில் மிகத் தெளிவாக இருந்தார்கள். ஜனாதிபதியின்
வெற்றிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் கொந்தளிப்பு நிலை தொடர்ச்சியாக
இருப்பதனை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி விரும்பாது.
இவ்விடயத்தில ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கின்ற சூழ்நிலை எமக்கு மாத்திரமல்ல ஜனாதிபதிக்கும் இருக்கின்றது. அது அவருடைய நிறைவேற்று அதிகாரத்தின் முடிவுகளாக அமைந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். இம்முறை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது ஆதரவை வழங்கினால் அது தமிழ் மக்களுக்கு செய்யப்பட்ட அரசியல் படுகொலையாகவே அமையும்.
மைத்திரிபால சிறிசேனவுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறுபான்மை இனத்துடைய நலன் சார்ந்த எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை. இறுதியாக நடைபெற்ற கூட்டத்தின்போது சுமந்திரன் உட்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் வடபகுதியில் பாதுகாப்பு வலயத்திற்கென ஒதுக்கப்பட்ட ஐயாயிரம் ஏக்கர் காணியையாவது மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தால் விடுவிப்போம் என்ற வசனத்தைக்கூட தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவர்களால் சேர்க்க முடியாமல்போயிருக்கின்றது.
இவ்விடயமாக அவர்கள் சந்திரிகாவிடம் பேசியதாகவும் அவர் அதை மைத்திரியிடம் பேசியதாகவும் மைத்திரிபால சிறிசேன அவர்கள் அதை சம்பிக்கவிடம் பேசி அவர் அதற்கு பதில் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழர்களுக்கு தீர்வுமில்லை, அதிகாரப் பகிர்வுமில்லை,வடபகுதி காணிப் பிரச்சனைக்கு மாத்திரம் தீர்வை உறுதிப்படுத்த முடியாத ஒரு கூட்டத்திற்கு நாங்கள் வாக்களித்தால் அவர்கள் எதிர்பார்க்கின்ற தீர்வுக்கான அரசியல்போக்காக அதை பார்க்க முடியாது. யாழ்மேலாதிக்கவாதிகளுடைய வர்க்க அரசியலாகவே அதை பார்க்க முடியும். ஆகவே இம்முறை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விரும்பியோ விரும்பாமலோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்து வெளிப்படையாக பேசினால் பல நன்மைகள் தமிழர்களுக்கு கிட்டும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது முஸ்லிம் காங்கிரசும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் எதிரணிக்கு ஆதரவு வழங்கியபோதும்கூட ஜனாதிபதி மகிந்த பதினெட்டு இலடசம் மேலதிக வாக்குகளால் வெற்றியீட்டினார். இம்முறை தமிழர்களுடைய வாக்குகளும் ஜனாதிபதி மகிந்தவுக்கு கிடைத்து வெற்றியை பெறக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.
கடந்தகால மாகாணசபையை குழப்பமில்லாது நடத்தியதன் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரசின் போக்குகளை அவதானித்ததன் அடிப்படையில் அவர்களுக்கு வெளிப்படையான தீர்மானம் எடுக்கின்ற அல்லது மாகாணத்தின் சிறுபான்மை மக்களுடைய அதிகாரப் பங்கீட்டில் ஒரு அங்கம் இதில் நாங்கள் பங்கெடுக்க வேண்டும் என்ற எண்ணப்பாடு இல்லை.
அரசியலில் சந்தர்ப்பங்கள் வரும்போது அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதை முஸ்லிம் காங்கிரஸ் செய்ய எத்தனித்து முடியாமல்போனது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் ஒரு அரசை அமைப்பதற்கான எந்தவொரு அத்திவாரமும் இடாமல் கூரையை போட எண்ணுகின்றனர். அரசுடன் இணைந்தால் தேவையானவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வரவேண்டும். பேரினவாத சக்திகளுக்கு மத்தியிலும் குறைந்தபட்சம் வடக்கு கிழக்கிற்கு மாகாணசபை முறையையாவது பெற்றுப்கொடுத்த தலைவர் தான் மகிந்த ராஜபக்ச அவர்கள். அந்த அடிப்படையிலாவது அதை பேசி பலப்படுத்தாமல் இருக்கின்றவற்றையும் இல்லாமல் செய்பவர்களுடன் பேசமுடியும் என்றால் ஏன் ஜனாதிபதி மகிந்தவுடன் அவர்களால் பேச முடியாது? தேர்தல் காலத்தில் அவர்களின் பேரம்பேசும் ஆற்றலை ஏன் கையாளவில்லை?

0 Comments:
Post a Comment