10 Jan 2015

மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாகும் எண்ணமில்லை

SHARE
நாட்டின் அன்பான மக்களின் பொறுப்புகள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாவும், அதனை மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றுவேன் எனவும் ஜனாதிபதியாக இன்று பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மீண்டுமொருமுறை ஜனாதிபதியாகும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இன்று மாலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வைத்து இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் உரையாற்றிய போதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

என்னை வேட்பாளராகத் தெரிவு செய்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனக் குறிப்பிட்ட அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவிப்பதாக கூறினார்.

இதேவேளை தேர்தல் காலத்தில் பிரச்சார மேடைக்கு தீவைத்தமை, ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியமை போன்ற விடயங்கள் தொடர்பிலும் கவலையடைவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
SHARE

Author: verified_user

0 Comments: