12 Jan 2015

கிழக்கு மாகாண சபையினால் தமிழ் மக்கள் பல வகைகளில் ஓரங்கட்டப் படுள்ளார்கள் கி.மா.உ - இரா.துரைரெத்தினம்

SHARE
கிழக்கு மாகாண சபையினால் தமிழ் மக்கள் பல வகைகளில் ஓரங்கட்டப் படுள்ளார்கள், தமிழ் மக்கள் துக்கி வீசப்பட்டும் உள்ளார்கள். இவைகள் அனைத்தும் மூன்று தடவைகள் கிழக்கு மாகாண சபையில் உறுப்பினராக இருந்த எனக்கு நன்கு தெரியும்.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக் கிழமை மாலை (11) மட்டக்களப்பு-பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக் கழகம் நடத்திய வருடாந்த பரிசழிப்பு விழாவில் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.அகிலன் தலைமையில் பெரியகல்லாறு கலாசார மண்டப்பத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…..

கிழக்கு மாகாகண சபையினால் வழங்கப்படுகின்ற அரச நியமனங்களில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளார்கள். அதிகாரிகள் மட்டத்தில் வகிக்கின்ற பதவிநிலைகளில், தமிழ் மக்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளார்கள். காணி, ஏனை அபிவிருத்திகள், நிதி ஒதுக்கீடுகள் என பலவாறாக தமிழ் மக்களை கிழக்கு மாகாணசபை புறந்தள்ளியுள்ளது.

இவை அனைத்தினையும் கருத்திற் கொண்டு, எதிர் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் ஆட்சி மாற்றத்தினூடாக தமிழ் மக்களுக்கு ஏற்ற நடைமுறைக்குச் சாத்தியமான எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஈடு செய்யக் கூடய அளவிற்கு நியமனங்கள், அபிவிருத்திகள், போன்றவற்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அக்கறை செலுத்தி ஈடுபடும். எனத் தெரிவித்த அவர்…..

கிழக்கு மாகாணத்திலும்சரி, மட்டக்களப்பு மாவட்டத்திலும் சரி நமது பிள்ளைகள், கல்வியில் போட்டி போட்டுக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே பெற்றோர்களும், ஆசிரியர்களும், கிராமங்களிலுள்ள அமைப்புக்களும் நமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உந்து சக்தியளிக்க வேண்டும்.

தற்போதைய நிலையில் ஏனைய சமூகத்துடன் நமது பிள்ளைகள், கல்வியில் போட்டி போட்டு படிக்க வேண்டியுள்ளது. அவ்வாறு போட்டி போட்டு உந்து சகத்தியுடன் படிக்கின்றபோதுதான் எமது சமூகத்திலிருந்தும், பொறியியலாளர், வைத்தியர்கள், போன்ற துறைசார் நிபுணர்களாக எமது பிள்ளைகளை உருவாக்கமுடியும்.  எனவே பெற்றோர்கள், ஆசிரியர்களும், மாத்திரமின்றி கிராம மட்ட அமைப்புக்களுக்கும் நமது பிள்ளைகளை கற்றல் தொடர்பாக முன்னேற்றும், பாரிய பொறுப்பும் கடமையும் உள்ளது. என அவர் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: